புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கைதியின் ரீமேக்கான போலா ட்ரைலர் ரிலீஸ்.. லோகேஷ் இத பார்த்தா நெஞ்சு வலியே வந்துரும்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு மாஸ் ஹிட் கொடுத்த படம் கைதி, இந்த படம் போலா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகி உள்ளது. ஹிந்தி ரீமேக்கை அஜய் தேவ்கன் இயக்கியதுடன் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இவருடன் அமலாபால், தபு, சஞ்சய் மிஷ்ரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தமிழில் கைதி படத்தில் கதாநாயகி கிடையாது. ஆனால் ஹிந்தியில் தபு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also Read: கைதி ஹிந்தி ரீமேக் ஆன போலா டீசர்.. டில்லியை கண்முன் கொண்டு வர தவறினாரா அஜய் தேவ்கன்?

இந்த ட்ரைலரை மட்டும் பார்த்தால் கைதி படத்தை இயக்கிய லோகேஷுக்கு நெஞ்சுவலி வந்துவிடும். அந்த அளவிற்கு பாலிவுட் கைதி படத்தை நாசம் பண்ணி வச்சு இருக்காங்க. இதற்கு முன்பு காஞ்சனா, ராட்சசன் ஆகிய படங்களை ரீமேக் என்ற பெயரில் பாலிவுட் திரையுலகம் கொடுமைப்படுத்தி வைத்திருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் போலா படத்தின் ட்ரைலரில் மனிதர்களோடு மனிதர்களாக சிறுத்தை நடந்து வருவது போன்றும், தபுவின் ஓவர் ரியாக்சன் போன்றவை ட்ரைலரை பார்ப்போரை எரிச்சலடைய வைத்துள்ளது.

Also Read: பிசினஸை பெருக்கிக் கொள்ள லோகேஷ் தில்லாலங்கடி ட்ராமா.. அக்கட தேசத்தில் டாப் நடிகருடன் கூட்டணி

அதேபோல் கைதி படத்தையும் பிரம்மாண்டம், 3D எஃபெக்ட் என்கின்ற பெயரில் ரியாலிட்டி விஷயங்களில் கோட்ட விட்டு விடுவார்கள். போலா படத்தை வருகிற மார்ச் 30ஆம் தேதி 3D-இல் ரிலீஸ் செய்யவும் படக்குழு ப்ளான் போட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் கைதி படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே அளவு வரவேற்பு போலா படத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் மார்ச் மாத இறுதியில் வெளியாக இருக்கும் அஜய் தேவ்கனின் போலா படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ போலா படத்தில் ட்ரெய்லர்!

Also Read: கமல், சூர்யா லியோ படத்தில் நடிப்பார்களா?. விஜய் போட்ட கண்டிஷனால் குழம்பி போன லோகேஷ்

- Advertisement -

Trending News