வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

ஆங்கிலத்தில் சரளமாய் பேசக்கூடிய 5 நட்சத்திரங்கள்.. ஆங்கிலேயர்களின் வாயை அடைத்த அயன் லேடி

60, 70களில் முன்னணி நடிகர்களாக நடித்தவர்கள் பற்றி நமக்கு அந்த அளவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது படங்கள் மூலம் நாம் அவர்களைப் பார்த்து ரசித்திருப்போம். அப்படிப்பட்ட நடிகர்கள் நடித்ததுடன் மட்டுமல்லாமல் அவர்கள் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் திறமை வாய்ந்தவர்கள் ஆகவும் அப்போதே காலத்திலே இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நட்சத்திரங்களை பற்றி நாம் பார்க்கலாம்.

சிவாஜி கணேசன்: இவர் எல்லா காலத்திலும் சிறந்த நடிகர்களில் ஒருவராக பெயர் பெற்றவர். இவருடைய நடிப்பு எப்பொழுதுமே ஒரு முழுமையாகவும், பேசுகிற குரல் மற்றும் டயலாக் டெலிவரிக்காக அதிக அளவில் பாராட்டை பெற்றவர். பன்முகத் திறமையை பெற்ற இவர், அதிக அளவில் தமிழில் பேசி பார்த்திருப்போம். ஆனால் யாரும் அறியாத வகையில் ஆங்கில அறிவாற்றலும் இவரிடம் இருந்து இருக்கிறது.

Also read: 6 டாப் ஹீரோக்களுடன் சூப்பர் ஹிட் கொடுத்த சிவாஜியின் படங்கள்.. ஜல்லிக்கட்டில் நீதிபதியாக பின்னி பெடல் எடுத்த நடிகர் திலகம்

ஜெயலலிதா: இவர் நடிகர் மற்றும் அரசியல்வாதியாக இருந்து பணியாற்றியவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 140 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் “தமிழ் சினிமாவின் ராணி” என்ற பெயரை பெற்றவர். பின்னர் வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்கு சென்று மக்களிடமிருந்து அபரிமிதமான புகழைப் பெற்றவர். இவரிடம் மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது இவருடைய கம்பீரமான பேச்சு தான். முக்கியமாக இவரிடம் இருக்கும் ஆங்கில திறமை வெள்ளைக்காரர்கள் தோற்றுப் போகும் அளவிற்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவர். இவர் ஆங்கிலேயர்களின் வாயை அடைத்த அயன் லேடி என்ற பெயரை பெற்றவர்.

ஜெமினி கணேசன்: இவர் தமிழ் சினிமாவில் காதல் சம்பந்தமாக அதிகமான கதாபாத்திரங்களில் நடித்ததால் இவரை “காதல் மன்னன்” என்று அழைக்கப்பட்டார். அப்போது திரையுலகில் நுழைந்த சில கல்லூரி பட்டதாரிகளில் இவரும் ஒருவர். அதனால் இவரிடம் சரளமாக ஆங்கிலம் பேசும் திறமை இருந்ததால் அப்போதைய நடிகர்கள் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு இருந்தது.

Also read: தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்கள்.. சிவாஜியை மிரள விட்ட தலைவி

ரவிச்சந்திரன் : இவர் 60, 70களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களில் நடித்த ஒரு மலேசிய நடிகர். பின்பு 1986 முதல் துணை கதாபாத்திரத்தில் நடித்து மற்றும் சில படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவருடைய ஆங்கில பேச்சு ரொம்பவும் ஸ்டைலிஷ் ஆகவும், அழகாகவும் பார்ப்பவர்கள் கண் சிமிட்டாத வகையில் ஆங்கிலத்தை சரளமாக பேசும் திறமை வாய்ந்தவர்.

முத்துராமன்: இவர் 60, 70களில் நடிகராக நடித்து “நவரச திலகம்” என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். இவரது குடும்பமே படித்து மேதையாக இருப்பவர்கள் தான். அதனால் என்னமோ இவரிடம் ஆங்கிலம் கலந்த அறிவாற்றலுடன் கூடிய சரளமாக பேசும் திறமை வாய்ந்தவர். இவருக்கு எந்த விதத்திலும் குறைந்து போகாமல் இவருடைய மகன் நவரசம் நாயகன் கார்த்திக் அவர்களும் அருமையாக பேசுவார் என்று அனைவரும் அறிந்ததே.

Also read: நல்ல வாய்ப்பு கிடைத்தும் கௌதம் கார்த்திக்கு ஓடாத 5 படங்கள்.. அப்பா அளவிற்கு வளர முடியாமல் போன துரதிர்ஷ்டம்

- Advertisement -spot_img

Trending News