தமிழ் சினிமாவில் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் அல்லது நெகடிவ் ரோல்களில் நடித்து மக்கள் மனதில் அதிகமாக பரீட்சியமானவர்கள் சில நடிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய் விட்டார்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சில கதாபாத்திரங்களை பற்றி பார்க்கலாம்.
போஸ் வெங்கட் : சினிமாவில் சின்னத்திரை தொலைக்காட்சி மூலம் நடிப்பதற்கான வாழ்க்கையை ஆரம்பித்தார் .இதனைத் தொடர்ந்து ஈரம்,சிவாஜி மருதமலை, சிங்கம், கோ, போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பரீட்சியமானார். அதன் பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு இணையாக கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது ஆனாலும் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போய்விட்டார்.
Also read: பாலு மகேந்திராவின் சிறந்த 6 படைப்புகள்.. இன்றுவரை அழியாத ‘மூன்றாம் பிறை’
மைம் கோபி: இவர் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு சென்னையில் ஒரு புகழ் பெற்ற மிமிக்கிரி நடிகராக இருந்திருக்கிறார். அத்துடன் நடிப்பை வெளிக்காட்டும் கலையை சொல்லிக் கொடுக்கும் விதமாக ஜி மைம் ஸ்டூடியோவை நடத்தி வருகிறார். அதாவது இவர் சொல்லிக் கொடுக்கும் கலை எந்தவிதமானது என்றால் பேச்சுக்கள் மூலமாக இல்லாமல் வெறும் சைகை மட்டுமே வைத்து ஒரு கதையை புரிய வைக்கும் படி நடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்து வருகிறார். மேலும் இவர் மெட்ராஸ், கபாலி மற்றும் பைரவா போன்ற படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் இப்பொழுது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
நிழல்கள் ரவி: இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1980இல் நிழல்கள் என்ற படத்தில் மூலம் இவரது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து சின்னத்தம்பி பெரியதம்பி, நாயகன், வேதம் புதிது போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். பின்பு ஒரு காலகட்டத்திற்கு பிறகு சீரியலில் நடித்து வந்தார். ஆனால் அதன் பிறகு ஒரேடியாக சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார்.
Also read: தோல்வியை பார்க்காத 5 தமிழ் இயக்குனர்கள்.. யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்த லோகேஷ்
அழகம்பெருமாள் : இவர் மணிரத்தினத்திடம் உதவியாளராக பணிபுரிந்தார். இவருக்கு படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் படத்தை இயக்குவதற்கு முன்பாக அதிகமான படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்திருக்கிறார். பின்பு சினிமாவை பற்றி நன்றாக தெரிந்து கொண்ட பிறகு டும் டும் டும் படத்தை இயக்கினார். பின்பு அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜூட், உதயா படங்களை இயக்கினார். இப்படி இவரிடம் திறமைகள் இருந்தாலும் இவரால் தொடர்ந்து இயக்குனராகவும் அல்லது நடிகராகவும் வர முடியாமல் போய்விட்டது.
சம்பத்ராஜ் : இவர் பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். அதிலும் பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் ரோல்களில் தான் அதிகமாக நடித்திருக்கிறார். இவர் நடித்த பிரியாணி மற்றும் ஜில்லா படங்களில் அதிக அளவில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆனார். ஆனாலும் இவரால் தொடர்ந்து ஒரு வில்லன் கதாபாத்திரத்திலோ அல்லது முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து நிலையாக வர முடியாமல் போய்விட்டார்.
ஜெயபிரகாஷ் : இவர் முதன் முதலில் தயாரிப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். பின்பு தயாரிப்பாளராக இருக்கும் பொழுதே சில படங்களில் குணசித்திர நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொண்டு பசங்க, நாடோடிகள், யுத்தம் செய், மங்காத்தா, போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். முக்கியமாக இவர் நடித்த யுத்தம் செய் படத்தில் டாக்டர் ஜுடோஸ் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனாலும் இப்பொழுது இவருக்கு தமிழில் மவுஸ் இல்லாமல் போய்விட்டது. அதனால் மலையாளம், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் வருகிறதாம்.