வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாடிக் கொண்டிருக்கும் 60 வயது நடிகரின் மன்மத லீலைக்கு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. டாப் நடிகரின் சகோதரராக இருக்கும் இந்த மூத்த நடிகர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றதை அடுத்து, மூன்றாவது முறையாகவும் திருமணம் செய்து கொண்டார்.
அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தார். இந்நிலையில் அவரை விவாகரத்து செய்யலாமலேயே 44 வயதுடைய நடிகையை தற்போது காதலித்து திருமணம் செய்து கொண்டார். 60 வயது நடிகரை இந்த 44 வயது நடிகை காதலித்து வந்தது மட்டுமல்லாமல், பொது இடத்தில் லிப் டு லிப் கிஸ் அடித்தும் அலப்பறை செய்து கொண்டிருந்தனர்.
Also Read: அட்ஜஸ்மென்ட் கேட்டு நடிகை காலில் விழுந்த இயக்குனர்.. நாட்டாமையிடம் சென்ற பஞ்சாயத்து
இதற்கிடையே கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இதை அறிந்த அந்த 60 வயது நடிகரின் 3வது மனைவி அவர்கள் இருவரும் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்று செருப்பால் அடித்து மந்திரித்து விட்டார்.
அப்படியும் திருந்தாத மன்மதன் 4வது மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, அவருக்கு தாலி கட்டிய வீடியோவையும் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 3வது மனைவியை விவாகரத்து செய்யாமலேயே எப்படி திருமணம் செய்தார் என்ற சர்ச்சையையும் எழுப்பியது.
Also Read: சரக்கு பாட்டில், கையில் மல்லிகைப்பூ.. மைனர் குஞ்சாக மாறிய சர்ச்சை இயக்குனர்
மேலும் இந்தக் காதல் ஜோடி வெளிநாடுகளில் உல்லாசமாக இருக்கும், கண் கூசும் ஹனிமூன் புகைப்படங்களும் வெளியாகிறது. ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்’ இந்த புகைப்படங்களை பார்த்த 3வது மனைவி, வெளிநாட்டில் இருந்து விரைவில் ஊர் திரும்ப இருக்கும் மன்மதனுக்காக ஏர்போர்ட் வாசலிலேயே தொடப்பம், செருப்பும் கையும்மாய் காத்திருக்கிறார்.