சிறுநீரக பிரச்சனைக்கு கூட இருந்தே குழி பறித்த நபர்.. பல வருட சீக்ரெட்டை உடைத்த பொன்னம்பலம்

வில்லன் நடிகராக பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கும் பொன்னம்பலம் கடந்த சில வருடங்களாகவே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தது அனைவருக்கும் தெரியும். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்கு உதவி செய்யும் படி மீடியா முன் கேட்டிருந்தார்.

இதை பார்த்து பதறிப்போன பல நடிகர்களும் அவருக்காக உதவி செய்தார்கள். அது மட்டுமல்லாமல் கோடான கோடி ரசிகர்கள் கூட தங்களால் முடிந்த உதவியை அவருக்கு செய்தார்கள். அதன் பலனாக தற்போது அவர் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு நலமுடன் இருக்கிறார். அந்த வகையில் அவரின் அக்கா மகன் தன்னுடைய கிட்னியை பொன்னம்பலத்திற்கு கொடுத்து உதவியது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இது ஒரு புறம் இருக்க அவருடைய சிறுநீரக பிரச்சனைக்கு காரணம் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் தான் என்ற ஒரு பிரச்சனையும் கிளம்பியது. ஆனால் தற்போது இதற்கு என்ன காரணம் என்று பொன்னம்பலம் வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது அவருடைய அப்பாவின் மூன்றாவது மனைவிக்கு பிறந்த மகன் தான் இதற்கு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

பொன்னம்பலத்தின் அப்பாவிற்கு 4 மனைவிகள். அதில் நான்காவது மனைவிக்கு பிறந்தவர் தான் இவர். இருப்பினும் நான்கு மனைவிகளின் பிள்ளைகளும் ஒற்றுமையாக தான் வளர்ந்து இருக்கிறார்கள். அதில் மூன்றாவது அம்மாவிற்கு பிறந்த அண்ணன் தான் தனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து விட்டதாக பொன்னம்பலம் கூறியிருக்கிறார். ஏனென்றால் சினிமாவில் அவர் நிறைய சம்பாதித்து வீடு, சொத்து என்று நன்றாக இருந்திருக்கிறார்.

மேலும் தன்னுடன் பிறந்தவர்களுக்கும் அவர் நிறைய செய்திருக்கிறார். இதை பார்த்த அந்த அண்ணன் பொறாமையின் காரணமாக ஒரு முறை சாப்பாட்டில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து இருக்கிறார். மற்றொரு முறை பீரில் கலந்து கொடுத்து இருக்கிறார். இதையெல்லாம் விட செய்வினை, மாந்திரீகம் போன்ற விஷயங்களையும் அவர் செய்திருக்கிறார்.

ஒரு முறை பொன்னம்பலம் நடுராத்திரியில் தூக்கம் வராமல் வீட்டின் பால்கனியில் நின்றிருக்கிறார். அப்போது அவருடைய அசிஸ்டெண்டும் அண்ணனும் சேர்ந்து வீட்டின் பின்புறத்தில் ஒரு குழி தோண்டி மாந்திரீக பொம்மை, பொன்னம்பலம் பயன்படுத்திய உடை ஆகியவற்றை போட்டு புதைத்திருக்கின்றனர். இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர் அந்த துரோகிகளை கையும் களவுமாக பிடித்திருக்கிறார்.

இப்படி சில விஷயங்களால் தான் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் ஸ்லோ பாய்சன் அவரை சாவின் விளிம்புக்கே கொண்டு சென்றிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த விஷயத்தை பற்றி கூறியிருக்கும் பொன்னம்பலம் தற்போது கடவுளின் அருளால் நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு உதவி செய்த நடிகர்களுக்கும், முகம் தெரியாத ரசிகர்களுக்கும் தன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.