திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பாதியிலேயே அம்போன்னு விட்டு சென்ற தயாரிப்பாளர்.. கணவரே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கேவலம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஐட்டம் டான்சர் ஒருவர், மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகரை காதலித்துள்ளார். இதை அந்த நடிகையின் அம்மா கண்டித்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆனவரை எதற்கு காதலிக்கிறாய் என்று அவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் அந்த நடிகை அதை கேட்கவில்லை. சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவரும் முதல் மனைவியை விட்டுவிட்டு ஐட்டம் நடிகையுடன் சென்னையில் வந்து பணம் இல்லாமல் சாதாரண வீட்டில் தங்கியிருந்து நடித்து வந்தார்.

Also Read: உடலாலும், மனதாலும் நடந்த டார்ச்சர்.. கருக்கலைப்பு, விவாகரத்து திசை மாறிய நடிகையின் வாழ்க்கை

ஐட்டம் டான்சர் திருமணத்திற்கு பிறகு இனிமேல் யாரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடாது என்று முடிவெடுத்து கன்னட படத்தில் நடித்து வந்தார். படம் முடியும் தருவாயில் தயாரிப்பாளர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்க, ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார். அப்போது அவரை மட்டும் விட்டு விட்டு படம் முடிந்து அனைவரும் சென்று விட்டனர்.

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மறுத்ததால் தயாரிப்பாளரும் அந்த நடிகை தங்கி இருந்த ஹோட்டலுக்கு பில் கூட கட்டாமல் பாதியில் அம்போன்னு சென்று விட்டாராம். அதன் பின் ஹோட்டலில் இவரிடம் தங்கி இருந்ததற்கு பணம் கேட்டுள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் காதுல கைல போட்டிருந்த நகையை அடமானம் வைத்து அந்த நடிகை ஊர் திரும்பி இருக்கிறார்.

Also Read: டாப் ஹீரோ முதல் காமெடியன் வரை.. ஐட்டம் நடிகையின் வாழ்க்கையில் விளையாடிய நடிகர்கள்

அப்போது காதல் திருமணம் செய்த அந்த நடிகர், ‘எதற்காக தயாரிப்பாளர் கூப்பிட்டதற்கு போகவில்லை. என் முதல் மனைவி இப்படித்தான் போவார். நீயும் போய் இருக்கலாம். போய் இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது’ என்று கேவலமாக பேசியதை கேட்டதும், அந்த ஐட்டம் டான்சருக்கு தூக்கி வாரி போட்டது.

அப்போதுதான் இந்த நடிகரின் குணம் தெரிந்தது. தன்னை வைத்து பணம் சம்பாதிக்க காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் பொய்யாக காதலித்த அவரை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு, இப்போது அந்த ஐட்டம் நடிகை அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.

Also Read: பிஞ்சிலே பழுத்த 16 வயது நடிகை.. படுக்கையறை காட்சியில் தாராளம் காட்டு என கூறிய அம்மா

- Advertisement -

Trending News