சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வரலட்சுமி-யின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த 5 படங்கள்.. தளபதிக்கே அரசியல் கற்றுத் தந்த கோமளவல்லி

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரம் என்றால் நீலாம்பரி தான் என்ற பெயரை உடைக்கும், அளவிற்கு தனது நடிப்பு திறமையின் மூலம் மாஸ் காட்டி வருபவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். அப்படியாக சர்க்காரில் தனது மிரட்டலான நடிப்பின் மூலம் தளபதி விஜய் அவர்களுக்கே அரசியலை கற்றுத் தந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரலட்சுமி-யின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த 5 படங்களை இங்கு காணலாம்.

சண்டக்கோழி 2: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் சண்டக்கோழி 2. இதில் விஷால் உடன் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் வரலட்சுமி சரத்குமார் பேச்சி என்னும் கதாபாத்திரத்தில் விஷாலுக்கு எதிராக தனது கொடூர வில்லத்தனத்தில் மாஸ் காட்டி இருப்பார். 

Also Read: நக்மா முதல் நமீதா வரை.. மகள் வரலட்சுமி முன்னாலேயே மேடையில் கலாய்க்கப்பட்ட சரத்குமார்

சத்யா: 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சுதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான மர்மம் நிறைந்த திரைப்படம் ஆகும். இதில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கொலை வழக்கினை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டி இருப்பார்.

வீரசிம்ஹா ரெட்டி: தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. மேலும் இப்படத்தை இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார். இதில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ், துனியா விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இதில் வரலட்சுமி எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். 

Also Read: விஷாலால் திருமணத்தை வெறுத்த வரலட்சுமி.. விஜய் டிவி பிரபலம் மீது வந்த திடீர் காதல்

கொன்றால் பாவம்: இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொன்றால் பாவம். இதில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஒரு எளிய குடும்பத்தின் பேராசை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது என்பதை மையமாக வைத்து வெளிவந்த திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் வரலட்சுமி சரத்குமார் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சர்க்கார்: இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான அதிரடி திரைப்படம் ஆகும். இதில் விஜய், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் விஜய், சுந்தர் ராமசாமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் தன்னுடைய ஒரு ஓட்டிற்காக ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு, செல்லும் விஜய்க்கே அரசியல் கற்றுத் தரும் கோமளவள்ளி என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார்.

Also Read: நீலாம்பரிக்கு நிகரான அக்மார்க் வில்லி.. வரலட்சுமி சரத்குமாரின் சிறந்த 5 படங்கள்

- Advertisement -

Trending News