விஜய் ஆண்டனி உடன் நேருக்கு நேராக மோதும் மாஸ்டர்.. ரேசில் திடீரென்று நுழைந்த 3வது ஹீரோ

நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் படங்களில் எந்தவித அலட்டலும் இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருப்பதால் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது விஜய் ஆண்டனி கையில் மொத்தம் பத்து படங்களுக்கு மேல் உள்ளது. பல வருடங்களாக ஒரு படம் கூட வெளிவராமல் இருக்கிறார். விபத்துக்கு பிறகு பிச்சைக்காரன் 2 வெளியிட்டு வெற்றி காணலாம், அதுவும் தனியாக படத்தை வெளியிட்டால் நிறைய திரையரங்குகள் கிடைக்கும் என நம்பி இருந்தார்.

ஆனால் இந்த படத்திற்கு போட்டியாக மாஸ் ஹீரோ ஒருவரும், அதன் தொடர்ச்சியாக இளம் ஹீரோவும் ரேசுக்கு வந்து விஜய் ஆண்டனிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றனர். ஏனென்றால் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ள நிலையில் படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தபோது, திடீரென மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படமும் வெளி வருகிறது.

இதனால் பயங்கர அப்சட்டில் விஜய் ஆண்டனி இருந்தார். பின்னர் ஒரு படம் தானே பரவாயில்லை என்று மனசை தேற்றிக்கொண்டார். அடுத்ததாக திடீரென ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த வீரன் படமும் அந்த தினம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று விஜய் ஆண்டனி பயத்தில் இருக்கிறார்.

இதற்கு காரணம் திரையரங்குகள் குறைவாக கிடைக்கும். வசூலிலும் பாதிப்பு ஏற்படும். விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் பெறும் எதிர்பார்ப்புக்கு இடையே பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் வருகிறது.

மேலும் விஜய் ஆண்டனியின் சமீப கால படங்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் இந்த முறை தோற்றால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என பயத்தில் இருக்கிறார். மேலும் முதல் முதலாக ராகவா லாரன்ஸ், விஜய் ஆண்டனி மற்றும் ஹிப்ஹாப் ஆதி மூவரும் ஒரே நாளில் மோதிக் கொள்வதால், இந்த விஷயத்தை கோலிவுட்டில் பரபரப்பாக பேசுகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →