வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கட்டின பொண்டாட்டியையும், பிள்ளையையும் கண்டுக்காத குணசேகரன்.. உயிருக்கு போராடும் ஈஸ்வரி

அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் ஒரே சீரியல் எதிர்நீச்சலாக தான் இருக்க முடியும். ஆதிரையின் திருமணத்தை அவர் நினைத்தபடி நடத்தி வைப்பதற்காக குணசேகரன் மற்றும் ஜனனி, எஸ்கேஆர் இடம் சுமுகமாக பேசி தாம்பூல தட்டு மாற்றி விட்டார்கள். பிறகு வீட்டுக்கு வரும் வழியில் தர்ஷனிடம் இருந்து ஜனனிக்கு போன் வருகிறது.

அதைக் கேட்டதும் ரொம்பவே பதற்றம் ஆகிறார். பின்பு குணசேகரனிடம் கூறிய போது அவர் தர்ஷன் ஏன் உனக்கு கால் பண்ண வேண்டும் என்று கேட்கிறார். உடனே ஜனனி இப்போ அதுவா ரொம்ப முக்கியம் என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் எது முக்கியம் எது முக்கியம் இல்லை என்று நீ எனக்கு பாடம் நடத்தாத என்று கூறுகிறார். ஆனால் ஜனனி கிட்ட இருந்த பதற்றம் குணசேகரன் இடம் கொஞ்சம் கூட இல்லை.

Also read: அப்பத்தாவின் சூழ்ச்சி வலையில் குணசேகரன்.. 40% ஷேருக்காக மானத்தை அடமானம் வைக்கும் கேவலம்

உடனே ஜனனி காரை நிப்பாட்டி நடுரோட்டில் இறங்குகிறார். அடுத்தபடியாக குணசேகரன் வீட்டிற்கு போனதும் அப்பத்தா அவரிடம் என்ன ஆச்சு அப்படி என்று கேட்கிறாங்க. அதற்கு குணசேகரன் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று கூறுகிறார். உடனே அப்பத்தா, ஜனனியை எங்கே என்று கேட்கிறார். குணசேகரன், ஏதோ பிரச்சனை அதனால் அவள் இறங்கி போயிட்டா அப்படின்னு சொல்கிறார்.

உடனே பாசத்தில் எல்லாரும் பொங்காதிங்க போனவங்களுக்கு வர தெரியும் என்று தெனாவட்டாக பேசுகிறார். இவர் கேரக்டர் எப்படி என்று எல்லாத்துக்குமே தெரியும். ஆனால் கட்டின பொண்டாட்டியும், பெத்த பிள்ளையையும் கண்டுக்காத ஒரு கொடூரமான ஆளாக தான் இருக்கிறார். அப்படி இவர் சொத்தை யாருக்காக எதுக்காக சேர்த்து வைக்க போறாரு. யாரு மேலையும் பாசத்தை காட்டாத ஒரு அரக்கனாக இருக்கிறார்.

Also read: வழக்கம்போல் புலம்பித் தவிக்கும் கோபி.. பாக்யாவை படாத பாடு படுத்தும் ராதிகா

அப்படி ஜனனிக்கு என்ன தான் போன்ல தர்ஷன் சொல்லி இருப்பான் ஏன் இவ்வளவு பதற்றம். நடு ரோட்டில் காரை விட்டு இறங்கி போகும் அளவிற்கு ஈஸ்வரிக்கு ஏதாவது ஆகி இருக்குமா. ஏற்கனவே இவர் தொடர்ச்சியாக பல சீன்களில் வருவதில்லை. அப்படியே வந்தாலும்  ஓரமா ஒரு நிமிடத்தில் எங்கேயாவது வந்துட்டு போவாங்க.

இப்படி இருக்கையில் ஈஸ்வரிக்கு விபத்து ஆன மாதிரி காட்டிவிட்டு அவர் கொஞ்சம் நாட்கள் வராமல் இருக்கப் போகிறார். அத்துடன் நாடகத்தில் ரொம்பவும் எதிர்பார்த்த சில கேரக்டர்கள் இப்பொழுது அவர்களை எல்லாம் கதைக்கு கொண்டு வரவே இல்லை. அதில் முக்கியமாக வசு, கௌதம் மற்றும் ஜனனியின் குடும்பம் இவர்களெல்லாம் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. அப்படித்தான் ஈஸ்வரி நிலைமையும் ஆகப்போகிறதா இல்லை அவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம் கட்டி வரும் ஜீ தமிழ்

- Advertisement -

Trending News