குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஒருவர் சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பற்றி கூறியது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சிறுவயதிலேயே விளம்பர படங்கள், சீரியல் என பிசியாக வலம் வந்த அந்த நடிகை குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகி இருக்கும் இவர் எட்டு வயதாக இருக்கும்போது இசையமைப்பாளர் ஒருவரால் அந்தரங்க டார்ச்சரை அனுபவித்திருக்கிறார். அவர் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது இசை அமைப்பாளர் ஒருவர் இந்த நடிகையை தன் மடியில் உட்கார வைத்து பேசி இருக்கிறார்.
Also read: படத்துல நடிச்சா மட்டும் பத்தினி வேஷம்.. தவணை முறையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை
மேலும் குழந்தை என்றும் பாராமல் தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொட்டு அத்துமீறி இருக்கிறார். விவரம் தெரியாத பெண்ணாக இருந்த அந்த நடிகைக்கு அதை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் ஏதோ தவறு என தெரிந்து கொண்டு அவரின் பிடியில் இருந்து வெளிவர முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் அந்த இசையமைப்பாளரின் பிடி உடும்பு பிடியாக இருந்திருக்கிறது. எப்படியும் அதிலிருந்து தப்பித்த அந்த நடிகை வீட்டில் கூட இதைப்பற்றி சொல்ல தெரியாமல் தவித்து இருக்கிறார். அதன் பிறகு காலப்போக்கில் இது போன்ற விஷயங்களை எல்லாம் அவர் புரிந்து கொண்டு தைரியமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.
இருந்தாலும் அந்த எட்டு வயதில் அவருக்கு நடந்த இந்த கொடுமையான அனுபவம் மட்டும் அவர் மனதில் ரணமாக பதிந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அவர் இது போன்ற டார்ச்சர்களை தைரியமாக எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தற்போது மீடியாவை விட்டு ஒதுங்கி இருக்கும் அவர் அவ்வப்போது சில சேனல்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்து வருகிறார்.
Also read: டான்ஸ் மாஸ்டரின் பிடியில் மயங்கி கிடந்த நடிகை.. மன்மத லீலையை சொல்லி பிரித்து விட்ட எக்ஸ் காதலிகள்