திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

முதல் பட வெற்றியோட காணாமல் போன 6 இயக்குனர்கள்.. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங் பில்டிங் வீக்கான லிங்குசாமி

தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே வெற்றி பெற்று இருக்கிறார்கள். பின்பு அதற்கு அடுத்து இயக்கி வந்த படங்கள் எல்லாமே அவருக்கு சொல்லும் படியாக அமையாமல் தோல்வி படமாக தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு அந்த இயக்குனர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.

சரண்: இவர் ஒரு காலத்தில் கே பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர். இவர் இயக்குனராக எடுத்த முதல் படம் காதல் மன்னன். இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் எதுவுமே கை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் நல்ல வெற்றியை கொடுத்து வந்த இவருக்கு தோல்வி படமாக இப்பொழுது அமைகிறது.

சுசீந்திரன்: இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. இதற்கு அடுத்து நான் மகான் அல்ல, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களை இயக்கி ஒரு முன்னணி இயக்குனராக வந்த நிலையில் இவருக்கு அடுத்ததாக பெரிய அளவில் சொல்லிக்கிற மாதிரி எந்த படங்களும் அமையவில்லை.

Also read: இவங்க 10 பேர் ஜென்மத்திற்கும் சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லை.. எலியும் பூனையுமாக இருக்கும் நடிகர்கள்

சுராஜ்: இவர் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் எப்படி இருக்கும் என்றால் ஆக்ஷன் மற்றும் மசாலா படங்களை இயக்குவதில் மிகவும் பிரபலமானவர் என்று பெயரை எடுத்திருக்கிறார். இவர் முதன்முதலில் மூவேந்தர் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். பின்பு குங்கும பொட்டு கவுண்டர், மிலிட்டரி, மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை போற்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இதற்கடுத்து இவர் இயக்கிய அலெக்ஸ் பாண்டியன், சகலகலா வல்லவன் அப்பாடக்கர், கத்தி சண்டை, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

ஏ.எல் விஜய்: இவர் கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதற்கு அடுத்து மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, சைவம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து ஒரு பெரிய இயக்குனராக வலம் வந்தார். பின்பு இவர் இயக்கிய படங்கள் ஆன தியா, குட்டி கதை, எல்லாம் ஒன்றும் சொல்லுகிற மாதிரி இல்லாமல் போய்விட்டது.

Also read: நடிகைகள் கைநழுவ விட்ட பக்காவான 7 படங்கள்.. குந்தவையாக நடிக்க இருந்த கீர்த்தி நடிகை

ராஜேஷ் எம்: இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பொதுவாகவே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்திருக்கும். இவர் இயக்கத்தில் வெளிவந்த படமான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் எல்லாம் ரசித்து பார்க்கும் படியாக வெற்றியை கொடுத்தது. பின்பு இவர் இயக்கத்தில் வெளிவந்த கடைசி இரண்டு படங்களும் பெரிதாக சொல்லிக்கும்படி அமையவில்லை.

லிங்குசாமி: தமிழ் சினிமாவில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ரன், பையா, சண்டக்கோழி, வேட்டை போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவர் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இவர் சினிமாவில் ஒரு வெற்றி இயக்குனராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த கடைசி படமான இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவில் வெற்றி கொடுக்கவில்லை. இவர்கிட்ட பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருந்துச்சு பில்டிங் வீக் ஆயிட்டு என்றே சொல்லலாம்.

Also read: பொண்டாட்டி தொல்லை தாங்காம கழட்டி விட்ட 5 நடிகர்கள்.. இளம் நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்

- Advertisement -

Trending News