புருஷனைப் போல் 2வது காதலரையும் தூக்கி கடாசிய நடிகை.. அம்மணிக்கு என்ன ஒரு தொழில் பக்தி

பிரபல இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை, திருமணத்திற்கு பிறகும் நடிக்க அடம் பிடித்ததால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் சோசியல் மீடியாவில் கவர்ச்சி புயலாகவே மாறிய அந்த நடிகை, காதல் கணவரை கடாசி விட்டு படங்களில் தீவிரமாக நடித்து வந்தார்.

நடிகைக்கு என்ன ஒரு தொழில் பக்தி என நினைத்துக் கொண்டிருக்கையில், மற்றொரு திரை பிரபலத்துடன் காதலில் விழுந்து லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் 2வது காதலனுடன் அம்மணி செய்த சேட்டைகள் அனைத்தும் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பியது. இதனால் கடுப்பான ஹீரோயின் 2வது காதலரையும் சத்தம் இல்லாமல் கழட்டிவிட்டார்.

சமூக வலைதளங்களில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை பதிவிட்டதனால் தான் நடிகை தன்னை கழட்டி விட்டதாக அந்த மும்பை பிரபலம் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் போட்டோ வெளியானதால் நடிகை பொங்கிவிட வில்லையாம். இதற்கு முன்பே, அந்த காதலனுடன் தனிமையாக இருந்த புகைப்படங்கள் நிறையவே வெளியாகியிருக்கிறது.

அப்படி இருக்கையில் 2வது காதலரை கழட்டி விடுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நடிகைக்கு மூன்றாவதாக ஒரு நடிகருடன் திடீர் காதல் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் அந்த மும்பை பிரபலத்தை கழட்டி விட்டுள்ளார்.

இப்படி வரைமுறையே இல்லாமல் காதலர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டிருப்பதால் நடிகையின் நிலைமை எங்க போய் நிற்கப் போகிறது என தெரியவில்லை. பால் எது? கள் எது? என்று தெரியாத நிலையில் நடிகையின் மூன்றாவது காதலும் எத்தனை நாள் நிலைக்கப் போகிறதோ என்று கேலிக்கூத்துக்கு ஆளாகியுள்ளார்
.