சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

எச்சி கிளாஸ் கழுவி தான் இந்த நிலைமைக்கு வந்தேன்.. மேடையில் எமோஷனலாக பேசிய விஜய்யின் ஹிட் பட இயக்குனர்

தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் டாப் இயக்குனர் ஒருவர், தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த கஷ்ட நஷ்டத்தை மேடையில் எமோஷனலாக பேசி பலரையும் கலங்க வைத்துள்ளது.

2001 ஆம் ஆண்டு அஜித்தின் சூப்பர் ஹிட் படமான தீனா படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ஏஆர் முருகதாஸ், அதன் பிறகு சூர்யாவின் கஜினி, ஏழாம் அறிவு போன்ற படங்களை இயக்கினார். அதன் பின் தளபதி விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

Also Read: முதல் படத்திலேயே வெற்றி கண்ட 6 இயக்குனர்கள்.. விக்ரமை பைத்தியமாக அலையவிட்டு ஹிட் கொடுத்த பாலா

இவருடைய படங்களில் டாப் ஹீரோக்கள் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய இயக்குனராகவே பார்க்கப்படுகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த ஏஆர் முருகதாஸ் ‘ஆகஸ்ட் 16, 1947′ என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.எஸ். பொன்குமார் இயக்கியிருக்கிறார். இதில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது ஏஆர் முருகதாஸ் உருக்கமாக பேசி பலரையும் கண்கலங்க வைத்துள்ளார்.

Also Read: இப்பதாங்க இவரு டம்மி.. யாராலயும் யோசிக்க முடியாத ஏ.ஆர்.முருகதாஸின் 5 ஹிட் படங்கள்

‘இந்த உலகத்தில் தன்னிச்சையாக யாராலும் நல்ல நிலைமைக்கு வந்துவிட முடியாது. நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு 100 பேர் உதவி செய்திருக்கிறார்கள். நான் முன்னேற வேண்டும் என நினைத்த 100 பேர் போட்ட பிச்சைதான், என்னை சினிமாவில் அடையாளப்படுத்தியது.

நான் கேரியர் சாப்பாடு வாங்குவதற்காக ஏறி இறங்காத கடைகளே இல்லை. எச்சி பிளேட், டீ கிளாஸ் கழுவி தான் சினிமாவில் முன்னேற முடிந்தது. நான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம், இப்போது சந்தோஷமாக இருக்கிறேன் என்று ஏஆர் முருகதாஸ் மனம் உருகிப் பேசினார்.

Also Read: வரலட்சுமி-யின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த 5 படங்கள்.. தளபதிக்கே அரசியல் கற்றுத் தந்த கோமளவல்லி

- Advertisement -spot_img

Trending News