சினிமாவை பொருத்தவரையிலும் ஹிட் படங்களை கொடுப்பதற்கு நடிகர்கள் ரொம்பவும் மெனக்கெட்டு வருகின்றனர். அதிலும் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பு அமையாதா என்று கூட ஒரு சில நடிகர்கள் ஏங்கி வருகின்றனர். இந்நிலையில் கிடைத்த வாய்ப்பை ஒரு சில நடிகர்கள் சூழ்நிலை காரணமாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டனர். ஆனால் அவர்கள் தவறவிட்ட படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிறகு இந்த படத்தை ஏண்டா விட்டோம் என மனம் வருந்தியுள்ளனர். அப்படியாக தாங்கள் மிஸ் செய்த படத்தை நினைத்து கதறி அழுத 6 ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.
சிம்பு: கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா மற்றும் கார்த்திகா நாயர் நடிப்பில் உருவான திரைப்படம் கோ. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஜீவா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தான். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தப் படத்தில் இருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டது.
அஜித் குமார்: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் அசின் நடிப்பில் உருவான திரைப்படம் கஜினி. இந்தப் படத்தில் சூர்யா நடித்த கேரக்டரில் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. அதற்காக போட்டோ சூட் எல்லாம் நடத்தப்பட்டது. ஆனால் ஏதோ சில காரணங்களால் அஜித்தால் நடிக்க முடியாமல் போனது. இதேபோல் 90ல் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவனும் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பகுதி கதை பிடிக்காததால் நடிக்க மறுத்துவிட்டார்.
விக்ரம்: மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா நடிப்பில் உருவான திரைப்படம் பம்பாய். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படத்தில் அரவிந்த்சாமி நடித்த சேகர் கதாபாத்திரத்தில் முதன் முதலில் விக்ரம் தான் நடிக்க இருந்தார். ஆனால் அப்பொழுது விக்ரம் வேறு ஒரு படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கைநழுவி போனது.
அப்பாஸ்: பாசில் இயக்கத்தில் விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் உருவான திரைப்படம் காதலுக்கு மரியாதை. இப்படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சாக்லேட் ஹீரோவான அப்பாஸ் தான். ஆனால் படத்தின் கதை பிடிக்காமல் போனதால் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் பின்னாளில் விஜய் நடிப்பில் வெளிவந்து படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
விஜய் சேதுபதி: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி தான். ஆனால் சில காரணங்களால் விஜய் சேதுபதி அந்த கேரக்டரை செய்ய முடியாமல் போனது.
டேனியல் பாலாஜி: வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் டாப்ஸி நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில் பேட்டைக்காரன் என்னும் வில்லன் கதாபாத்திரம் முதலில் டேனியல் பாலாஜிக்கு தான் வந்தது. ஆனால் வயதான கதாபாத்திரம் என்பதால் படத்தின் வாய்ப்பை தவிர்த்து விட்டார். ஆனால் அவர் நடிக்க மறுத்த கதாபாத்திரத்திற்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.