ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முக்கோண காதல், சைக்கிள் ஓட்டத் தெரியாதவன் கையில பிளைட்ட கொடுத்தா எப்படி இருக்கும்? தசரா முழு விமர்சனம்

ஸ்ரீகாந்த் ஓதெலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தசரா. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கருப்பு புழுதி பறக்கும் கிராமத்து கதைய அம்சத்தைக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

ஒரு மது கடையை யார் கைப்பற்றுவது என இரண்டு விதிகள் இடையே போட்டி நிலவுகிறது. தேர்தலில் வென்றவர்களுக்கு மட்டுமே அந்த மது கடை சொந்தம் ஆகும். ஆனால் இந்த இரண்டு வீதிகள் உள்ள நானி மற்றும் திக்ஷித் ஷெட்டி இருவரும் நட்பாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் நானி, கீர்த்தி சுரேஷ்-யை காதலித்து வரும் நிலையில், சிறு வயது முதலே திக்ஷித்தும் கீர்த்தியை விரும்புகிறார்.

Also Read : கீர்த்தி சுரேஷ் மீது கடும் கோபத்தில் சுதா கொங்கரா.. கே ஜி எஃப் தயாரிப்பாளருக்கே இப்படி ஒரு சோதனையா!

ஒரு கட்டத்தில் நானிக்கு இந்த உண்மை தெரிய வர நண்பனுக்காக காதலியை விட்டுக் கொடுக்கிறார். மேலும் தீக்ஷித், கீர்த்தி சுரேஷுக்கு திருமணமான அன்றே நானி இவரை காதலித்த உண்மை தீக்ஷித்துக்கு தெரிய வருகிறது. இதற்காக அவர் நானியை சந்திக்க செல்லும்போது வில்லன்களால் கொல்லப்படுகிறார்.

மேலும் நண்பனின் கொலைக்கு யார் காரணம் என்றும், அவரை பலி வாங்கினாரா என்பது தான் தசரா படத்தின் கிளைமாக்ஸ். கதை எங்கேயோ ஆரம்பித்து முக்கோண காதல், கொலை, பழிவாங்குதல் என சம்பந்தமே இல்லாமல் கதை நகருகிறது. அதுமட்டுமின்றி படத்தில் அதிகம் தெலுங்கு வாடை உள்ளது.

Also Read : பட ப்ரோமோஷனில் படுமோசமாக நடந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.. வாய் எடுக்காமல் செய்த சாகசம்

சைக்கிள் ஓட்ட தெரியாதவன் கையில் பிளைட்ட கொடுத்தா எப்படி இருக்கும் என்பது போல தசரா படத்தை சொதப்பி வைத்துள்ளார் இயக்குனர். மேலும் இதுவரை ரொமாண்டிக் ஹீரோவாக பார்க்கப்பட்ட நானி முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் பால்வாடி டீச்சர் ஆக நடித்திருந்தார். தசரா படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பு அபாரமாக இருந்தாலும் நிறைய மைனஸ் பாய்ண்டுகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்கு இப்படம் பிடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களை கவர தசரா படம் தவறிவிட்டது.

Also Read : நடிகைகள் கைநழுவ விட்ட பக்காவான 7 படங்கள்.. குந்தவையாக நடிக்க இருந்த கீர்த்தி நடிகை

- Advertisement -

Trending News