தோற்றத்தை பார்த்து ஆரம்பத்தில் நிராகரித்த நடிகர்கள்.. ஒரு பைக்கை வைத்து மிரட்டிய வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை திரைப்படம் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இவர் இதுவரை எடுத்த படங்கள் எந்த ஒரு சரிவையும் சந்தித்தது இல்லை. அந்த வரிசையில் தற்போது விடுதலை படமும் அமைந்துவிட்டது. தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். வெற்றிமாறனின் வெற்றி படங்களின் வரிசையில் தற்போது இந்த படமும் சேர்ந்து விட்டது.

இன்று தமிழ் சினிமா ரசிகர்களாலும் கலைஞர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் வெற்றிமாறன் அவ்வளவு எளிதாக இந்த இடத்திற்கு வந்து விடவில்லை. இளமையான வயதிலேயே சினிமாவில் நுழைந்த இவரது தோற்றத்தை பார்த்து பல நடிகர்கள் இவர் என்ன படம் எடுத்து விட போகிறார் என்று ஆரம்பத்தில் நிராகரித்து இருக்கின்றனர்.

ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் தோற்றத்தில் ஒரு மாதிரியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பட்டையை கிளப்ப கூடியவர். அவருடைய ஆங்கில பேச்சை பற்றி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். தமிழ் இயக்குனர்களிலேயே சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய இயக்குனர் என்றால் அது வெற்றி மாறன் தான்.

வெற்றிமாறனின் ஆங்கிலத் திறமைக்கு முக்கியமான காரணம் அவருடைய தாயார் தான். தன்னுடைய அம்மா ஆங்கில ஆசிரியர் என்பதால் வெற்றிமாறனுக்கு இயல்பாகவே ஆங்கிலம் சரளமாக வந்துவிட்டது. ஆனால் நல்ல கதை இருந்தும் தோற்றத்தினால் பல நடிகர்கள் இவரை நிராகரித்திருக்கின்றனர். இறுதியில் அவரை நம்பி கை கொடுத்தது நடிகர் தனுஷ் தான்.

சினிமா இதுவரை பார்க்காத கதைக்களம் தான் பொல்லாதவன் திரைப்படம். ஒரு பைக்கை மையமாக வைத்து இரண்டரை மணி நேரம் சுவாரசியமாக கதை சொல்லி முடித்தார் வெற்றிமாறன். அதற்கான வெற்றியும் அவருக்கு கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் ஆடுகளம், விசாரணை, அசுரன், வடசென்னை என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார்.

ஒன்றிரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் கூட ஏதாவது ஒரு பெரிய ஹீரோ உடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் வெற்றிமாறன் தன்னுடைய கதையை மட்டுமே நம்பி ஒரு காமெடி நடிகராக இருந்த சூரியை ஹீரோவாக்கி இன்று ஜெயித்திருக்கிறார்.