புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

காசுக்காக சொந்த குடும்பமே கொல்ல நினைத்த வில்லன் நடிகர்.. 90களில் கலக்கிய பொன்னம்பலம் பிச்சை எடுத்த பரிதாபம்

பொன்னம்பலம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. கபாலி என்று சொன்னால் தான் தெரியும். அப்படி இவர் வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் கபாலி கேரக்டரில் அனைவரையும் மிரட்டி இருப்பார். இவர் 90களில் டாப் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் முரட்டு வில்லனாக நடித்து கலக்கினார்.

அதன் பின் சமீபத்திய படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்திருந்தார். பின் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் கலந்து கொண்டார். 26 வயதில் 7 கார், 3 வீடு என சம்பாதித்த இவர், மொத்த பணத்தையும் இழந்து வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அண்மையில் உடல்நிலை குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்திருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

Also Read: சிறுநீரக பிரச்சனைக்கு கூட இருந்தே குழி பறித்த நபர்.. பல வருட சீக்ரெட்டை உடைத்த பொன்னம்பலம்

இதை அடுத்து பலரிடம் உதவி கேட்டார். இவருக்கு சினிமா பிரபலங்களான சரத்குமார், கமல், சிரஞ்சீவி, கேஎஸ் ரவிக்குமார் என பலரும் உதவிக்கரம் நீட்டினர். இதைத்தொடர்ந்து பொன்னம்பலத்தின் சொந்த அக்கா மகனே தன் கிட்னியை கொடுத்து, அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவினார். தற்போது இவர் உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது.

மேலும் பொன்னம்பலத்தின் சிறுநீரகப் பிரச்சனைக்கு குடிப்பழக்கம் தான் காரணம் என பல்வேறு வதந்திகள் கிளம்பியது. இதற்கு பதிலளித்த பொன்னம்பலம் பல அதிர்ச்சி தகவல்களை கூறி உள்ளார். குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதால் என் சிறுநீரகம் பாதிப்படையவில்லை. என்னுடைய தந்தைக்கு 4 மனைவிகள். அதில் 3வது மனைவியின் மகனான என் சொந்த அண்ணன் என்னிடம் மேலாளராக சில காலம் பணி புரிந்தார்.

Also Read: கம்பீரமாக இருந்த கபாலியை காலி செய்த படம்.. சிறு ஆசையால் அனைத்தையும் இழந்த பொன்னம்பலம்

நான் அவரை மிகவும் நம்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னுடைய வளர்ச்சி பிடிக்காத அவர், எனக்கு ஸ்லோ பாய்ஷனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. சினிமாவில் முரட்டு வில்லனாக கலக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என்னுடைய வளர்ச்சியை பார்க்க அவரால் முடியவில்லை.

இதனால் பொறாமையில் சாப்பிடும் உணவில் விஷம் கலந்து விட்டார். அதுதான் எனது சிறுநீரக பாதிப்புக்கு காரணம் என்று மருத்துவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது வளர்ச்சி கண்டு வயிற்றெரிச்சலில் தன் அண்ணன் மாந்திரீகம் உட்பட பல வகையில் கெடுதல் செய்வதில் எனது சொத்துக்கள் எல்லாம் பறிபோய், தற்போது வாடகை வீட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Also Read: சொல்றதுக்குள்ள மனுஷன் செஞ்சே முடிச்சிட்டார்.. அதாங்க அஜித்.. பொன்னம்பலம் சொன்ன உண்மை

- Advertisement -

Trending News