ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வேறு ஒருவரை யோசிக்க முடியாத 8 பட்டங்கள்.. நடிகர் திலகம் முதல் சூப்பர் ஸ்டார் வரை

50-களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிய முன்னணி நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட 8 பட்டங்களில் வேறு யாரையும் யோசித்து கூட பார்க்க முடியாது. அப்படிப்பட்ட பட்டங்களுக்குரிய 8 நடிகர்களை பற்றி பார்ப்போம்.

மக்கள் திலகம்: சினிமாவிலும் அரசியலிலும் தனி ஆதிக்கம் செலுத்திய எம்.ஜி. ராமச்சந்திரன், 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கி சுமார் 136 படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் என்றாலே திரையரங்கில் ரசிகர்கள் வெறித்தனமாக சென்று பார்த்த காலங்கள் எல்லாம் உண்டு. அந்த அளவிற்கு மக்களின் மனதை கவர்ந்த எம்ஜிஆரை மக்கள் திலகம், புரட்சி கலைஞர் என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். அதனாலேயே இவர் மூன்று முறை முதலமைச்சரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

நடிகர் திலகம்: 250 படங்களிலும் கதாநாயகனாக நடித்து திரை உலகில் உச்சம் பெற்ற சிவாஜி கணேசன், ‘நடிப்பு திலகம்’ என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர். இவரைத் தவிர வேறு யாரையும் இந்த பட்டத்திற்கு யோசித்து கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு நல்ல குரல்வளம், தெளிவான உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்பு திறமை ஆகியவற்றிற்கு பெயர் போனவர். இவர் படங்களில் நடிக்கும் போது கண், இமை, உதடு என அனைத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி பிரமிக்க வைப்பார். இவரை நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக் குரலோன் என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

Also Read: முத்து படம் இல்லையென்றால் அஜித் இல்லை.. 27 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த ஏகேவின் வெற்றி ரகசியம்

சூப்பர் ஸ்டார்: ஸ்டைல் என்றால் அது ரஜினிகாந்த் தான். அந்த அளவிற்கு துடிப்பான நடை உடை டயலாக் டெலிவரி என அனைத்திலும் மிரட்டி விடுவார். இவர் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கினார் அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராக உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

புரட்சி கலைஞர்: சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கால் பதித்த விஜயகாந்த் தன்னுடைய படங்களில் புரட்சிகர கருத்துக்களை சொன்னதன் மூலம் மக்களின் ‘புரட்சி கலைஞர்’ என்ற பட்டத்தை பெற்றார். அது மட்டுமல்ல இவரை ‘கேப்டன்’ என்றும் ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள்.

காதல் மன்னன்: நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல சினிமாவிலும் செம ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ஜெமினி கணேசன். இவருடைய படங்களில் இளைஞர்கள் எப்படி காதலிக்க வேண்டும் என்பதை அக்குவேறு ஆணிவேராக பிரித்துக் காட்டி இருப்பார். இதனால் இவருக்கு காதல் மன்னன் என்ற பட்டமும் கொடுத்து கௌரவித்தனர்.

Also Read: எம்ஜிஆரை சுட்ட பின்பும் குறையாத மவுசு.. திரையுலகை ஆட்சி செய்த எம் ஆர் ராதாவின் கடைசி படம்

நடிகவேள்: முருக பக்தனான ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவை மறக்க முடியுமா. இவருடைய தனித்துவமான குரல் வளம், கேலி கிண்டல் கலந்த நகைச்சுவையான பேச்சைக் கேட்பதற்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தனர். 50-களில் எம்ஜிஆர் ரஜினி காம்போவில் இவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது மட்டுமின்றி நடிகவேள் என்ற பட்டத்தையும் பெற்றார்.

மக்கள் கலைஞர்: அதிரடி கதாநாயகன் நகைச்சுவை நடிகர் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்து ‘மக்கள் கலைஞர்’ என்ற பட்டத்தை பெற்றவர் ஜெய்சங்கர். இவர் பெரும்பாலான படங்களில் துப்பறிபவராகவும், போலீஸ் கெட்டப்பிலும் நடித்ததால் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

உலகநாயகன்: தன்னுடைய 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், அதன் பிறகு கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டினார். எப்போதுமே சினிமாவை வேறொரு கோணத்தில் பார்க்கக்கூடிய கமல் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு வெரைட்டி காட்ட வேண்டும் என்று வெறித்தனமாக நடிப்பார் இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் ரசிகர்கள் இருப்பதால் ‘உலகநாயகன்’ என்ற பட்டத்தை பெற்றார்.

Also Read: ஊர்ல எந்த பிரச்சனை நடந்தாலும் உருளுவது ரஜினியின் தலை தான்.. மகள்களால் மீண்டும் ஏற்பட்ட தலைவலி

இவ்வாறு திரை உலகில் வெவ்வேறு காலகட்டங்களில் கலக்கிய இந்த எட்டு நடிகர்களுக்கும் கொடுக்கப்பட்ட பட்டங்களை வேறு யாரையும் வைத்து யோசித்துக் கூட பார்க்க முடியாது அந்த அளவிற்கு இவர்களுக்கே உரித்தானதாக மாறியது. சிலருக்கு அவர்கள் பெயர்கள் கூட மறந்து விடும், அவர்களது பட்டத்தை தான் இன்றும் ரசிகர்கள் உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News