சினிமாவில் சினிமாவில் புதிதாக முயற்சிப்பவர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தங்களுக்கான மேடையாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதில் சிலர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றனர் ஒரு சிலர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தெரியாமல் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பே பொதுமக்களின் வெறுப்பை சம்பாதித்து கொள்கின்றனர்.
இதில் ஒரு சில சீசன்களில் புகழ் பெற்ற இயக்குனர்கள், நடன இயக்குனர்கள், நடிகர்கள் கூட கலந்து கொள்கின்றனர். அந்த வீட்டில் அவர்கள் நடந்து கொள்வதற்கு ஏற்ப மக்களிடையே இன்னும் நல்ல பெயரையும் எடுக்கின்றனர் அல்லது சம்பாதித்த பெயரை கூட தவற விட்டு விடுகின்றனர். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் ஒரு சிலர் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் சறுக்கி விடுகின்றனர்.
அப்படிதான் இந்த பிரபல ஹீரோவும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தான் சம்பாதித்த பெயரை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் தடுமாறி விட்டார். ஏற்கனவே சினிமாவில் ஜெயித்த இவர், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிறகு இன்னும் பிரபலமடைந்தார். பொதுமக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
நெடுஞ்சாலை, மாயா, நெஞ்சுக்கு நீதி போன்ற வெற்றி படங்களில் நடித்த ஆரி தான் அந்த ஹீரோ. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடையே மிகப்பெரிய ஆதரவை பெற்றார். ஆரியை எதிர்ப்பவர்கள் அந்த வீட்டிற்குள் இருக்க முடியாது என்ற அளவிற்கு ரசிகர்கள் இவரை தூக்கிக் கொண்டாடினர். ஏகப்பட்ட வாக்கு வித்தியாசத்தில் டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார்.
பிக் பாஸ் டைட்டில் என்பது ஆரி எதிர்பார்க்காத வெற்றி தான். ஆனால் வெற்றி பெற்ற பின்பு இவர் இனி நாம் எங்கேயோ போய் விடுவோம் என்று கொஞ்சம் ஓவர் மமதையில் ஆடிவிட்டார். இவருக்கு வெற்றியை கையாள தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கதை சொல்ல வருபவர்களிடம் அது சரியில்லை, இது சரியில்லை என்று வாய் கொடுத்து தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கிறார்.
தற்போது நடிகர் ஆரிக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இது போன்று தான் நடிகை ஓவியாவும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டமும், வரவேற்கும் இருந்தது. ஆனால் அவரது சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த வரிசையில் தான் இப்போது இணைந்திருக்கிறார் நடிகர் ஆரி.