லியோக்கு வலைவீசி தோற்றுப்போன அஜித்.. அடுத்த மூன்றெழுத்து நடிகரின் படத்தை டார்கெட் செய்த ஏகே

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வலிமை படமும், அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இதில் விஜய்யின் வலிமை படத்தை காட்டிலும், அஜித்தின் துணிவு படம் ஹிட்டான நிலையில், இப்படத்தை தொடர்ந்து ஏகே 62 படத்தில் நடிக்க அஜித் மும்முரமாக இருந்தார்.

மீண்டும் விஜய்யின் படத்துடன் மோதும் வகையில், விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்துடன், அஜித்தின் ஏகே 62 படத்தை ரிலீஸ் செய்ய அஜித் மும்முரமாய் இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் இப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வராமல் உள்ள நிலையில், அண்மையில் அஜித் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொண்டார். திடீரென அஜித்தின் தந்தையின் மறைவையடுத்து, தற்போது சென்னையில் உள்ள அஜித், புது பிளான் ஒன்றை போட்டுள்ளார். அதாவது ஏகே62 படத்தை, விஜய்யின் லியோ படத்துடன் மோத சாத்தியமே இல்லாத ஒன்றாக உள்ளது.

ஏற்கனவே லியோ படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நிறைவடைந்து படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது மூன்றெழுத்து நடிகரின் படத்துடன் ஏகே62 படத்தை வெளியிட அஜித் டார்கெட் செய்துள்ளாராம். சூரரைப் போற்று படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பெரும் மார்க்கெட்டை பிடித்தவர் தான் நடிகர் சூர்யா.

இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் சூர்யா42 திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூல் பல கோடி ரூபாய்க்கு பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இதனிடையே இந்த படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி படக்குழு ரிலீஸ் செய்யவுள்ளது.

இதனிடையே சூர்யா42 படத்துடன் அஜித்தின் ஏகே 62 படத்தை ரிலீஸ் செய்ய அஜித் பிளான் பண்ணியுள்ளாராம். அப்படி அஜித், சூர்யா படங்கள் ஒரே நாளில் ரிலீசாகி மோதினால் கட்டாயம் சூர்யாவின் படத்துக்கு மிகபெரிய பின்னடைவு உள்ளது. உதாரணமாக சூர்யா 42 படத்திற்கு திரையரங்கு கிடைப்பது முதல் வசூல் ரீதியாக வரை பெரிய பாதிப்பு வருவதால் சூர்யா 42 படக்குழு சற்று பதட்டத்தில் உள்ளனர்.