நயன்தாரா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தொட்டதெல்லாம் பொன் என்பது போல் அடுத்தடுத்து வெற்றியை மட்டுமே கடந்த பத்து வருடங்களாக பார்த்து வந்தார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்து ஜூன் மாதம் காதல் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் இறுதியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து பணிபுரிந்தனர். அதன் பின்னர் இருவருக்குமே சினிமா வாழ்க்கை என்பது சறுக்கலாகவே சென்று கொண்டிருக்கிறது. கால் சீட்டுக்களே இல்லாமல் பெரிய பெரிய படங்களை நிராகரித்த நயன்தாராவுக்கு தற்போது கைவசம் ஒரு படம் கூட இல்லை என்பதுதான் உண்மை.
நடிகை நயன்தாரா திருமணத்திற்கு முன் ஒப்பந்தமான ஜவான் திரைப்படத்தில் தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே நடித்த கனெக்ட் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. நயன் மற்றும் விக்கியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தான் இந்த படத்தை தயாரித்தது. படம் நினைத்த வெற்றியை அடையாமல் நஷ்டத்திலேயே முடிந்தது.
திருமணம் ஆகி 6 மாதங்களில் சரகோசி முறையில் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையாகியது. கிட்டத்தட்ட வழக்கு விசாரணை வரை சென்றது இந்த குழந்தைகள் விஷயம். குழந்தைகள் பெற்றுக் கொண்டது தான் பிரச்சனையானது என்றால் அவர்களின் பெயரை சமீபத்தில் வெளியிட்ட இந்த தம்பதிகள் பல நூல்களை சந்தித்தனர்.
கடந்த வருடம் அஜித்தின் 62 வது படத்தின் அதிகாரபூர்வ இயக்குனர் விக்னேஷ் சிவன் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விக்கி அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல் அடுத்தடுத்து அப்டேட் வெளியான விஜய் மற்றும் அஜித் படங்களில் நயன்தாரா கமிட் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றுவரை அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் எதுவுமே வெளிவரவில்லை.
இதனால் இந்த தம்பதி ரொம்பவே நொந்து போய் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு குலதெய்வ கோயிலுக்கு செல்லவில்லை என்பதாலும் குழந்தைகள் பிறந்த பின்பு கூட கோயிலுக்கு போகாமல் இருந்ததால் தான் இப்படி ஆகிறது என்று நினைத்த விக்கி மற்றும் நயன் தம்பதி தஞ்சாவூர் அருகே இருக்கும் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலுக்கு வந்து தரிசனம் செய்திருக்கின்றனர்.