விஜய் பட வில்லனுக்கு வந்த பகிரங்க மிரட்டல்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவது உறுதி

பொதுவாக விஜய் நடிக்கும் படங்களில் வில்லன் நடிகர்களுக்கு ஹீரோவுக்கு இணையான மாஸ் இருக்கும். அதற்காகவே மிகப் பிரபலமாக இருக்கும் நடிகர்களை தான் அவர் தனக்கு வில்லனாக தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் அவருக்கு வில்லனாக நடித்த டாப் நடிகர் ஒருவருக்கு தற்போது பகிரங்க மிரட்டல் வந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான வேலைகளும் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் எப்போதுமே ஆளும் கட்சி பிரபல நடிகர்களை தங்கள் பக்கம் இழுத்து வாக்குகளை சேகரிப்பார்கள். அதனாலேயே இந்த முறை யார் வாக்கு சேகரிக்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

அந்த வகையில் நடிகர் கிச்சா சுதீப் தானே முன்வந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்துள்ளார். கன்னடத்தில் மிகப்பெரிய ஹீரோவாக இருக்கும் இவர் தமிழில் நான் ஈ திரைப்படத்தில் பயங்கர வில்லனாக மிரட்டி இருப்பார். அதைத்தொடர்ந்து அவர் விஜய்யின் புலி திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் திடீரென வாக்கு சேகரிக்க வந்ததால் சிலர் அவருக்கு பகிரங்கமான மிரட்டலையும் விடுத்துள்ளனர். அதாவது நீ ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் உன்னுடைய அந்தரங்க வீடியோவை வெளியே விட்டு விடுவேன் என மர்ம நபர் ஒருவர் மிரட்டி இருக்கிறார். இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுதீப்பிடம் கேட்ட போது இப்படி ஒரு விஷயத்தை யார் செய்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும். அந்த நபர் சினிமா சம்பந்தப்பட்டவர் தான் என கூறி இருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் அந்தரங்க வீடியோ ஒன்று இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதனால் தான் சுதீப் சம்பந்தப்பட்டவர் யார் என்று எனக்கு தெரியும் எனவும் கூறி இருக்கிறார்.

இது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் இவருக்கு எதிராக சில விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அதாவது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஹிந்தியை எதிர்த்து பேசிய சுதீப் தற்போது ஹிந்தி கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். இவரை நம்பி எப்படி மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த விவகாரம் தான் தற்போது கர்நாடகாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.