ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வாயை கொடுத்து வம்படியாக மாட்டிக்கொண்ட அம்மணி அபிராமி.. எங்க போச்சு உங்க ‘நோ மீன்ஸ் நோ’!

நடிகை மற்றும் மாடலிங் கலைஞராக இருப்பவர் தான் அபிராமி. இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பொது மக்களுக்கு பரிச்சயமாக தெரிய ஆரம்பித்தது. நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது சினிமா மற்றும் மாடலிங் துறையில் பணிபுரிந்து வருகிறார் இவர். மேலும் இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.

சென்னையில் உள்ள கலாசேத்திரா என்னும் கல்லூரியில் தான் இவர் நடனம் பயின்றார். தற்போது கடந்த வாரத்திலிருந்து இந்த கல்லூரி தான் தமிழ்நாட்டின் ஹாட் டாக்காக மாறி இருக்கிறது. இதற்கு காரணம் அந்த கல்லூரியை சேர்ந்த நான்கு மாணவிகள் கல்லூரி பேராசிரியர்கள் நான்கு பேரின் மீது தங்களை தவறாக அணுகியதாக குற்றம் சுமத்தி இருந்தனர். மேலும் மாணவர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Also Read:மோசமான உடையில் மொத்தத்தையும் காட்டிய பிக்பாஸ் அபிராமி.. கழுத்துக்கு கீழ கண்ணா பின்னா கவர்ச்சி!

தற்போது இந்த குற்றச்சாட்டு வழக்கு விசாரணையாக மாறி அதில் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் கல்லூரியின் முன்னாள் மாணவி என்ற முறையில் கல்லூரிக்கு ஆதரவாக பேச வந்த அபிராமி தற்போது தங்களுடைய கல்லூரியில் அப்படி எந்த பிரச்சனையுமே நடக்கவில்லை என்றும் கலாசேத்திரா என்று சொல்லத் தெரியாதவர்கள் கூட தன்னுடைய கல்லூரியை பற்றி தவறாக பேசுகிறார்கள் என்றும் கொதித்தெழுந்தார்.

மேலும் நாளுக்கு நாள் மீடியாவை சந்தித்து வரும் அபிராமி குற்றம் சுமத்தப்பட்டு கைதாகி இருக்கும் அந்த ஆசிரியருக்கு ஆதரவாக நேரடியாகவே பேசி வருகிறார். இது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இன்றைய பேட்டியில் பத்திரிகையாளர்களிடமும் ரொம்பவும் மரியாதை இல்லாமல் பேசிய அபிராமியை அவர்கள் எதிர்த்து கேள்வி கேட்கவே அப்படியே அடங்கி விட்டார்.

Also Read:29 வயதில் மல்லு ஆன்ட்டியாக மாறிய பிக்பாஸ் அபிராமி! வெயிட் போட்டாலும் சும்மா கும்முன்னு இருக்காங்களே!

தற்போது நெட்டிசன்களும் அபிராமியின் இந்த செயலை கண்டித்து வருகின்றனர். மேலும் அவரை சங்கி என்று கூட சொல்வதாக அபிராமியே மீடியா முன்பு சொல்லி இருக்கிறார். மாணவிகள் தங்களுக்கு பிரச்சனை என்று போராட்டம் செய்து குற்றத்தை நிரூபித்திருக்கும் நிலையில் அபிராமி இப்படி தேவையில்லாமல் கல்லூரிக்காக வரிந்து கட்டிக் கொண்டு வருகிறேன் என்ற பெயரில் உள்ளே நுழைந்தது அவருடைய பெயரை அவரே கெடுத்துக் கொண்டது போல் ஆகிவிட்டது.

மேலும் கலாசேத்திரா கல்லூரியை சார்ந்தவர்கள் தூண்டுதலின் பேரிலேயே அபிராமி பேசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. நேர்கொண்ட பார்வை போன்ற ஒரு திரைப்படத்தில் நடித்த இந்த நடிகை, அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பெண்ணுரிமை, பெண்களுக்காக குரல் கொடுப்பது போல் சுற்றி வந்த இவர் இப்படி ஒரு செயலில் இறங்கி இருப்பது பொதுமக்களிடம் வெறுப்பாகவே மாறி இருக்கிறது.

Also Read:படவாய்ப்பு இல்லிங்க.. அதான் அப்படியே வண்டியை இந்த பக்கம் திருப்பி விட்டுட்டேன்.. பிக் பாஸ் அபிராமி

- Advertisement -

Trending News