சாக்லேட் பாய் இமேஜ் உடன் ஆணழகனாக வலம் வந்த பிரசாந்துக்கு இப்போதும் கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு காலகட்டத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் படங்களில் நடிப்பதில்லை. இருந்தாலும் அத்தி பூத்தாற் போல் இவருடைய படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு பற்றிய விவரம் வெளியாகி பலரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளது. இவர் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தன் சம்பளத்தை பல விஷயங்களில் முதலீடு செய்திருக்கிறார். அதிலும் சென்னை தி.நகரில் இவர் வாங்கி இருந்த ஒரு இடம் தற்போது பிரசாந்த் கோல்டு டவர் என்ற பிரம்மாண்ட கட்டிடமாக மாறி இருக்கிறது.
Also read: பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. உலக அழகியுடன் ரொமான்ஸில் மாஸ் காட்டிய ஹீரோ
கிட்டத்தட்ட 17 மாடிக் கொண்ட இந்த கட்டிடம் கடந்த 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதில் தான் உலகின் மிகப்பெரிய ஷோரூம்மான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. எட்டு மாடிகளில் மொத்தம் ஒரு லட்சம் சதுர அடியில் திறக்கப்பட்ட ஷோரூம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதைத் தவிர மற்ற மாடிகளிலும் பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டு நல்ல வருமானமும் அவருக்கு கிடைக்கிறதாம்.
அதில் ஒரு தளத்தில் பிரசாந்தின் ஆபீஸ் இயங்கி கொண்டிருக்கிறது. இப்படி பிரம்மாண்டமான முறையில் இருக்கும் இந்த கட்டிடத்தின் மதிப்பு இன்றைய தேதிக்கு பல நூறு கோடிகளை தாண்டும் என்கிறார்கள். இப்போது 100 கோடிகளைத் தாண்டி சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலரும் பல தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஆனால் பிரசாந்திடம் இருக்கும் இந்த பிரம்மாண்ட கட்டிடம் போல் யாரிடமும் கிடையாது என்பதுதான் உண்மை. அந்த வகையில் அவர் ஒரு பக்கா பிசினஸ்மேனாக தன்னுடைய தொழில்களை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அவருக்கு பல இடங்களில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறதாம். அதில் சென்னையில் முதலீடு செய்வதை தான் அவர் அதிகமாக விரும்புகிறார்.
அந்த வகையில் பிரசாந்த் நடிக்காமல் இருந்தாலும் கூட அடுத்த ஐந்து தலைமுறைகளுக்கும் சேர்த்து இப்போதே சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். இது கேட்போரை கொஞ்சம் தலைசுற்ற தான் வைக்கும். ஆனாலும் இவர் திறமையுடன் முன்னேறி தன் சம்பாத்தியத்தை பல மடங்கு லாபகரமாக மாற்றி இருப்பது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Also read: பிரசாந்த்துடன் நேருக்கு நேர் மோதி படுதோல்வி சந்தித்த விஜய்யின் 3 படங்கள்.. 90-களில் திணறிய தளபதி