விமல் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுத்து வெற்றி படமாக அமைந்தது. அதன் பின் அதை சரியாக பயன்படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு இவரது படங்கள் தொடர்ந்து சராசரியான வெற்றிகளை மட்டும் பெற்றது. ஆனால் இவருக்கு எப்படியாவது ஒரு பெரிய ஹீரோவாக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் அதற்கு ஏற்றபடி சரியான வழியை தேர்ந்தெடுக்க தவறியதால் பல சர்ச்சைகளில் சிக்கப்பட்டு இவர் பெயர் பெரிய அளவில் டேமேஜ் ஆனது. கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாததால் வேறு வழியில்லாமல் சொந்த தயாரிப்பில் மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தார். ஆனால் அது எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. அதனால் கடனுக்கு ஆளாகி விட்டார். பின்பு இவரிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது கொஞ்சம் தாறுமாறாக பேசி வம்பு வழக்குகளில் மாட்டிக் கொண்டார்.
இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களும் சுதாரித்துக் கொண்டு இவரை வைத்து படம் எடுத்தால் அது பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்லை என்று இவர் கமிட்டாகி இருந்த நிறைய படங்களை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இருந்தாலும் இவருக்கு தெரிந்த ஒரு சில தயாரிப்பாளரிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
அதன் மூலம் இவருக்கு கிடைத்த அவமானத்தை மாற்றி மறுபடியும் ஹீரோவாக வரவேண்டும் என்ற மெதப்பில் சுற்றி வருகிறார். அப்படி நடிக்கப் போகிற படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை என்றால் சினிமாவை மறந்துவிட்டு ஒரேடியாக போக வேண்டியது தான். அதனால் டேமேஜ் ஆன இவர் பெயரை தூக்கி நிறுத்துவதற்காக பக்காவாக பிளான் போட்டிருக்கிறார்.
அத்துடன் இவர் படங்கள் தாமதமாக இருக்கும் நிலையில் இரண்டு படங்களில் நடித்து படபிடிப்பை முடித்திருக்கிறார். அந்தப் படங்களை வேறு படங்களுடன் போட்டி போட்டு வெளியிட்டால் இவருக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிந்து இவருக்கு போட்டியாகவே இவரது படங்களை ரிலீஸ் செய்வதற்கு முடிவு எடுத்து இருக்கிறார்.
அதாவது இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய நினைக்கிறார். சரவணன் சக்தி இயக்கத்தில் “குலசாமி” திரைப்படமும், மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் “தெய்வ மச்சான்” இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் ஏப்ரல் மாதத்தில் 21ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றன. இவர் நினைக்கிறத பார்த்தா வந்தா மலை போனா பாத்துக்கலாம் அப்படிங்கற மாதிரி தான் ஒரு முடிவோட களத்தில் இறங்குகிறார்.