நூலிலையில் தப்பிய சிவாங்கி, விஜய் டிவி செய்த மட்டமான வேலை.. எலிமினேட் ஆன போட்டியாளர்!

விஜய் டிவிக்கு ஒருவர் வந்து விட்டாலே வெகு சீக்கிரத்திலேயே அவர் மக்கள் முன் பிரபலமாகிவிடுவார். அப்படி பிரபலமான சிவாங்கிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் காரணமாகவே அவர் இப்போது வெள்ளி திரையிலும் கால் பதித்துள்ளார். அதிலிருந்தே அவரைச் சுற்றி சில சர்ச்சைகள் பரவ ஆரம்பித்தது.

அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சிவாங்கி சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த இவர் தற்போது போட்டியாளராக களம் இறங்கியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவர் சமையலிலும் அசத்தி கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலிருந்து இப்போது வரை அவருடைய சமையலை குக் வித் கோமாளி நடுவர்கள் பாராட்டி வருகின்றனர். இதுதான் இப்போது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த வாரம் விஜே விஷால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் உண்மையில் சிவாங்கி தான் வெளியேறி இருக்க வேண்டும் என்றும் விஜய் டிவி அவரை திட்டம் போட்டு காப்பாற்றி விட்டது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பொதுவாக ஒரு வாரம் நன்றாக சமைப்பவர்கள் மறுவாரம் ஏதாவது ஒரு விஷயத்தில் சொதப்புவார்கள். ஆனால் சிவாங்கி மட்டும் எதிலும் சொதப்பாமல் இருப்பதே ஒரு சந்தேகத்தை கிளப்பியது. அதேபோன்று இதனை வாரங்களில் அவர் ஏன் ஒருமுறை கூட நான் வெஜ் உணவுகளை சமைக்கவில்லை எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதன் மூலம் விஜய் டிவி சிவாங்கிக்கு சாதகமாக நடந்து கொள்வது தெளிவாக தெரிகிறது. அதிலும் இந்த வார எலிமினேஷன் நிகழ்வின் போது சிவாங்கிக்கு அதிக நெகட்டிவ் விமர்சனங்கள் நடுவர்களால் கொடுக்கப்பட்டது. இருப்பினும் விஷால் எலிமினேட் செய்யப்பட்டு விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விஜய் டிவியை கண்டபடி திட்டி வருகின்றனர்.

இதைப் பார்த்த சிவாங்கி இந்த நிகழ்ச்சிக்காக அவர் பல மணி நேரம் பயிற்சி எடுப்பதாகவும், சொந்த வேலைகளை விட்டுவிட்டு கூட இதற்காக நேரம் செலவழிப்பதாகவும் ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் ரசிகர்கள் அவர் மீது இருக்கும் அதிருப்தியை வெளிப்படையாக காட்டி வருகின்றனர்.