வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வெளிப்படையாய் உண்மையை தைரியமாக பேசும் 6 நடிகர்கள்.. எல்லா மேடைகளிலும் அடித்து நொறுக்கும் சத்யராஜ்

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் தாங்கள் மனதில் நினைத்ததை அப்படியே வெளிப்படையாக பேச மாட்டார்கள். ஏனென்றால் அதன் பின் ஏற்படும் விளைவுகளை நினைத்து என்ன பேச வேண்டும் என்ற விஷயத்தை மட்டுமே தெளிவாக பேசுவார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் மேடை என்றும் கூட பார்க்காமல் சகப் பிரபலங்களைப் பற்றி ஆகட்டும், மற்ற எந்த ஒரு விஷயம் பற்றி ஆகட்டும் எப்பொழுதுமே மிகவும் வெளிப்படையாகவே பேசுவார்கள். அப்படியாக உண்மையை மேடை என்று கூட பார்க்காமல் தைரியமாக பேசும் 6 நடிகர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

மன்சூர் அலிகான்: சினிமா பிரபலங்களை பற்றி பேசி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குபவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே சுண்டைக்காய் என்று கூறி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ரஜினி ஆரம்பத்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் தற்பொழுது குடும்ப கஷ்டத்தில் உள்ள ஏழைகள் பக்கம் நிற்க மாட்டார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வசனங்கள் எல்லாம் படத்தில் மட்டும் தான் நிஜத்தில் இல்லை என்பது போல் ரஜினியை பற்றி மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also Read: மன்சூர் அலிகான் விஜய்க்கு வில்லனாக நடித்த 5 படங்கள்.. லோகேஷ் தேடி தேடி வாய்ப்பு கொடுத்தது இதுக்கு தானா

விஜய் சேதுபதி: இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். விடுதலை பட விழாவின் பொழுது மேடையிலேயே வெற்றிமாறனை வைத்துக்கொண்டு வடசென்னை படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று  சிரித்துக் கொண்டே கூறியுள்ளார் விஜய் சேதுபதி. வடசென்னை படத்தில் நடிப்பதற்கு மிகவும் எதிர்பார்த்த நிலையில் வாய்ப்பு கொடுக்காததால் வெற்றிமாறனை அசிங்கப்படுத்தியுள்ளார்.

சிவக்குமார்: பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சிவகுமார், தான் சந்தித்த அனுபவங்களை பற்றி வெளிப்படையாகவே தெரிவிக்கக் கூடியவர். அதிலும் பின்னால் வரக்கூடிய பிரச்சினைகளை நினைத்து பார்க்காமல் வெளிப்படையாக மனதில் பட்டதை பொது மேடைகளிலேயே பகிர்ந்து கொள்வார். இதற்காகவே நிறைய முறை விமர்சகர்களால் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார் என்றை சொல்லலாம்.

பார்த்திபன்: திரைத்துறையில் திறமை வாய்ந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குவது என்பது வழக்கமான ஒன்றுதான். அதில் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்திற்கு ஆறுதல் விருது மட்டுமே கிடைத்தது. இதனால் கோபம் கொண்ட பார்த்திபன் தான் பெற்ற விருதை திருப்பிக் கொடுத்தது மட்டுமல்லாமல் இனிமேல் விருது பெற போவதில்லை என்று மேடையிலேயே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read: வியாபாரம் ஆகாத விஜய் சேதுபதி.. தயாரிப்பாளர்கள் தெரித்து ஓடும் கொடுமை.!

ராதாரவி: சினிமா நிகழ்ச்சி தொடர்பான மேடைகள், பேட்டி என எல்லா இடத்திலும் நடிகர்கள் பற்றிய உண்மையை அப்படியே முகத்திற்கு நேராக பேசக்கூடியவர்களுள் ஒருவர்தான் ராதாரவி. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை உங்களது படங்களில் ஸ்டைல் என்ற பெயரில் நீங்கள் செய்யக்கூடிய செயல்களை அப்படியே இளைஞர்கள்  பின்பற்றுகிறார்கள். மேலும் மனிதன் படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் குண்டுகள் பொருந்திய உடையை அணிந்திருப்பதை பற்றி என்ன ஸ்டைல் இது என்பதைப் போல், ரஜினியின் முகத்திற்கு நேராகவே பொது மேடையில் வெளிப்படையாகவே கூறி பங்கம் செய்துள்ளார் ராதாரவி.

சத்யராஜ்: சினிமாவில் இருக்கக்கூடிய நடிகர்களை பற்றி சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது, அதனால் அவர்களை ஐன்ஸ்டீன் அளவிற்கு நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று பொது மேடையில் வெளிப்படையாக கூறியுள்ளார். சினிமாவில் ஹீரோக்கள் நடித்த படங்களை பாருங்கள் ஆனால் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள் என்பது போல் சத்யராஜ் தெரிவித்திருந்தார். அதிலும் இவர் ஒரு நடிகராக இருந்து இவ்வாறு பேசியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றை சொல்லலாம். 

Also Read: கேரக்டர் ரோலிலும் கலக்கிய சத்யராஜின் 5 படங்கள்.. கோமணத்தோடு அந்தர் பண்ணிய ஒன்பது ரூபாய் நோட்டு

- Advertisement -

Trending News