இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் 11 நாள் வசூல் விவரம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். அதிலும் போலீஸ் கெட்டப்பை ஏற்று நடித்திருக்கும் இவர், அதற்காகவே தாறுமாறாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் உடன் டாப் நடிகர்களுக்கு சவால் விடும் அளவுக்கு மிரட்டி உள்ளார்.
இவருடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி ‘பெருமாள் வாத்தியார்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். சூரி கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார். மேலும் இந்த படத்திற்காக 30 லட்சம் சம்பளம் பேசப்பட்ட நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதால் சூரியின் சம்பளம் 40 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்த படம் முழுவதும் அடர்ந்த வனப்பகுதியில் எடுக்கப்பட்டதால் கையில் துப்பாக்கியுடன் காடு,மேடு என ஓடிய பல காட்சிகளில் சூரி டூப்பே இல்லாமல் நடித்து அசத்தி இருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் மார்ச் 31-ம் தேதி வெளியான இந்த படம் 11 நாட்களில் 39 கோடியை வசூல் செய்திருக்கிறது.
இதோடு நின்று விடாது, இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும். ஆகையால் இன்னும் ஒரு சில நாட்களில் 50 கோடியை விடுதலை திரைப்படம் அசால்டாக தொட்டுவிடும். மேலும் விடுதலை படத்தில் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் மீதம் உள்ளதால் அதை 10 நாட்களில் எடுத்து முடித்து விட வேண்டும் என்றும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே விடுதலை படத்தில் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்து கொண்டிருக்கும் நிலையில், இரண்டாம் பாகமும் அதைவிட மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.