அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் படங்கள் ஓடுகிறதோ, இல்லையோ முன்னணி நடிகர்களின் சம்பளம் மட்டும் குறைந்தபாடில்லை. படம் வெற்றியடைந்தாலும், தோல்வியானாலும் ஒவ்வொரு படத்தையும் நடித்து விட்டு சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர் சில நடிகர்கள். இந்த விஷயம் கடந்த பல மாதங்களாக கோடம்பாக்கத்தில் பெரும் பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல திரைபிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் 167 படங்களில் நடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை காட்டிலும் வெறும் 66 படங்களில் நடித்த நடிகர் விஜய்க்கு சம்பளம் அதிகரித்து கொடுக்கப்படுவதும் சர்ச்சையான பேச்சாக உள்ளது. நடிகர் விஜய், ரஜினியை காட்டிலும் தமிழ் சினிமாவில் தனது படத்துக்கான மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார்.
இதன் காரணமாக ரஜினிகாந்திற்கு 85 கோடி வரை சம்பளமும், விஜய்க்கு 130 கோடி வரை சம்பளமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இவரது சம்பள விவரத்தை சிலர் ஆதரித்தும் வருகின்றனர். காரணம், விஜய்யின் திரைப்படங்கள் வெளியானால், ஓடிடி, டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் உள்ளிட்டவை மட்டுமே 200 கோடிக்கு மேல் வசூலாகும்.
மேலும் படம் ரிலீசானால் கட்டாயம் 250 கோடியிலிருந்து 300 கோடி வரை விஜய்யின் படங்கள் வசூலாகும். அந்த வகையில், விஜய்க்கு 130 கோடி வரை சம்பளம் கொடுப்பது சரியானது தான் என பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது விஜய்க்கு இவ்வளவு கோடி சம்பளம் கொடுப்பது மிகப்பெரிய தப்பு என பலரும் வாதிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் டேபிள் லாபம் மட்டுமே 1000 கோடி வரை தாண்டியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், தற்போதே இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூல் உட்கார்ந்த இடத்திலிருந்தே 1000 கோடியை அசால்ட்டாக கல்லா கட்டியுள்ளது.
இந்நிலையில் விஜய்க்கு கொடுக்கும் 130 கோடி சம்பளத்தில் பாதி சம்பளத்தை வைத்து சில கல்விக்கூடங்களை கட்டி ஏழைக்குழந்தைகளை படிக்கவைக்கலாம் என பலரும் பேசி வருகின்றனர். மேலும் இதுபோன்ற நல்ல காரியங்களுக்கு விஜய் தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து வந்தால் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும் வகையில் வகை செய்யலாம் என கூறப்படுகிறது.