எதிர்நீச்சல் சீரியலின் கதை தற்போது விறுவிறுப்பாக இல்லாமல் மற்ற சீரியல் மாதிரி போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. எப்பொழுது ஆதிரையின் காதல் கதை உள்ளே வந்ததோ அப்பத்தில் இருந்தே இதனுடைய வேகம் குறைந்துவிட்டது. சரி இப்பொழுது நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது. இதை முடித்துவிட்டு வேறு கதைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஒவ்வொருவரும் நிச்சயதார்த்தம் என்பதை மறந்து விட்டு சொத்துக்காக அல்லோளப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் பெண்களின் உரிமைக்காகவும் அவர்களுடைய மரியாதைக்காகவும் அதிகமாக போராடி வரும் அப்பத்தா, ஜனனி ஏன் ஆதிரையின் நிச்சயதார்த்தத்தில் நடக்கும் அக்கப்போர்களை தட்டிக் கேட்காமல் வரதட்சணைக்கு ஆதரவு தெரிவிக்கும் படி ஏன் மௌனம் காத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இயக்குனரும் அவர்களுக்கு இதுவரை கொடுத்த கேரக்டரையை மறந்து விட்டு தற்போது அந்த வீட்டு மருமகள் மாதிரி நடந்து கொள்ளும்படி நடிக்க வைக்கிறார். இது இந்த சீரியலை பார்ப்பதற்கே வெறுப்படையை செய்கிறது.
Also read: குணசேகரனை மடக்கிய எஸ் கே ஆர் தம்பிகள்.. இவரை மிஞ்சும் அளவிற்கு பிளான் போட்ட அப்பத்தா
நிச்சயதார்த்தத்தில் அரசு, கதிர் பெயரில் இருக்கும் கம்பெனியை கேட்டு குணசேகரனை பழிவாங்கும் எண்ணத்தில் அவர் குடும்பத்தை அவரே சபையில் அவமானப்படுத்தி வருகிறார் என்பதை மறந்துவிட்டார். இன்னொரு பக்கம் கதிர் தங்கையின் வாழ்க்கையை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் போதையில் இருக்கிறார்.
இதற்கு அடுத்து இந்த நிச்சயதார்த்தம் ஒரு வியாபாரமாக மாறிவிட்டது. கதிர் வந்து அரசுக்கு கையெழுத்து போட்டுக் கொடுக்க, அதன் பின் குணசேகரன் அப்பத்தாவிடம் நீ சொன்னபடி எல்லாம் நடக்கிறது. அதே மாதிரி நான் கேட்ட அந்த 40% சொத்தில் இப்பொழுது நீ கையெழுத்து போட்டு கொடு என்று குணசேகரன் அப்பத்தாவிடம் கேட்கிறார்.
Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்
ஆனால் அப்பத்தா குணசேகரனுக்கு எதிராக பெரிய பிளான் போட்டு இந்த நிச்சயதார்த்தத்தையும் திருமணத்தையும் எப்படியாவது நடத்தி விடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் இதற்கு ஆப்பு வைத்தார் குணசேகரன். இதில் நந்தினியை பார்க்கும் போது மட்டும் ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது. இவருடைய நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.
அடுத்ததாக ஆதிரை தன் நிச்சயதார்த்தம் நடக்குமா நடக்காதா என்று தெரியாமல் கூட இப்படி அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறோம் இவருடைய நிலைமையை பார்க்கும்போது பாவமாகவே இருக்கிறது. என்னதான் சீரியலாக இருந்தாலும் கொஞ்சம் லாஜிக்கா எடுத்தால் பார்க்க நல்லா இருக்கும் சுவாரசியமாகவும் இருக்கும்.