வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

டைட்டில் போஸ்டர் உடன் வெளியாக உள்ள ஏகே 62 அறிவிப்பு.. தரமான நாளை குறி வைத்த படக்குழு

ஏகே 62 படத்தின் அறிவிப்பு ஏதோ ஒரு காரணத்தினால் இழுபறியாக உள்ளது. அதாவது வினோத், அஜித் கூட்டணியில் வெளியான துணிவு படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மூன்று முறை வினோத்துடன் கூட்டணி போட்டதால் அஜித் புது இயக்குனருடன் கைகோர்க்க நினைத்தார். அதன்படி விக்னேஷ் சிவனுடன் இணைவதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கு விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காததால் அவரை நிராகரித்து விட்டனர். அதன் பிறகு பல இயக்குனர்களுடன் கதை கேட்டு கடைசியில் மகிழ்திருமேனியை லாக் செய்து வைத்துள்ளனர். மேலும் இப்போது மகிழ்திருமேனியும் கதையை ரெடி செய்து வைத்துள்ளாராம்.

Also read: அஜித்தால் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. லைக்கா எடுத்த திடீர் முடிவு

கடந்த முறை வாரிசு உடன் துணிவு போட்டியிட்ட நிலையில் லியோவுடனும் ஏகே 62 மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆனால் ஏகே 62 படத்தின் அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை.

ஆகையால் இந்த முறை விஜய்யுடன் அஜித் போட்டியிட முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் எப்போது ஏகே 62 அப்டேட் வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அந்த வகையில் தரமான நாளை குறி வைத்து படக்குழு ஏகே 62 அறிவிப்பை வெளியிட உள்ளது. அதாவது ஏப்ரல் மாதமே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Also read: பொன்னம்பலம் கேட்ட ஒரு விஷயம்.. கொஞ்சம் கூட யோசிக்காமல் அஜித் செய்த சம்பவம்

ஆனால் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி தான் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி வெறும் அறிவிப்பு மட்டுமல்லாமல் டைட்டில் போஸ்டர் உடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனராம். மேலும் அறிவிப்பு வெளியான உடனே படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

முதல்முறையாக மகிழ்திருமேனி, அஜித் கூட்டணி இணைந்துள்ளதால் கண்டிப்பாக படம் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டைட்டிலை வைத்து எது மாதிரியான கதை என்பதை ஓரளவு உறுதி செய்து விடலாம். எனவே மே 1 எதிர் நோக்கி அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also read: ஏகே-62 வாய்ப்பு பறிபோக அஜித் காரணம் இல்ல.. முதல் முறையாக உண்மையை உளறிய விக்னேஷ் சிவன்

- Advertisement -

Trending News