லியோ படப்பிடிப்புக்கு சைலண்டாக வரும் தனுஷ்.. ஒருவேளை அந்த கதாபாத்திரம் போல் இருக்குமா?

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் தேவையான செட்டுகள் போட்டு தயாராகி வருகிறது. இதை தெரிந்த விஜய்யின் ரசிகர்கள் அவரை பார்க்கும் விதமாக அடிக்கடி அங்கே போய்க்கொண்டு லியோ படப்பிடிப்புக்கு இடையூறாக வருகிறார்கள்.

இந்நிலையில் மூன்று நாட்களாக தனுஷின் கார் லியோ படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து செல்கிறது. இதை பார்க்கும் பொழுது தனுஷ் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. ஏற்கனவே இவர் இதில் நடிக்க இருக்கிறார் என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது.

Also read: தளபதிக்கு பெரும் தலைவலி கொடுக்கும் லியோ பட சூட்டிங் .. மனக்கஷ்டத்தில் விஜய் எடுத்த முடிவு

அதனால் 15 நாட்கள் தனுஷின் கால் செட் லோகேஷ் கேட்டு இருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் தனுஷ் அவரின் படத்தில் ரொம்பவே பிஸியாக இருப்பதால் லியோ படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறுகின்றனர். பிறகு ஏன் இவருடைய கார் தொடர்ந்து மூன்று நாட்களாக லியோ படப்பிடிப்புக்கு சென்று வருகிறது என்று தெரியவில்லை.

ஒரு வேளை கேப்டன் மில்லர் படத்திற்காக பிரசாத் ஸ்டூடியோவில் செட்டு போடுகிறார்களா, அதனால் இவருடைய கார் போய்க்கொண்டிருக்கிறதா, இல்லை என்றால் லோகேஷ் யாருமே கணிக்க முடியாத அளவுக்கு விக்ரம் படத்தில் சூர்யாவை கொண்டு வந்தது போல் லியோ படத்தில் தனுஷ்க்கும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை வைத்திருக்கிறாரா. அதனால் ரொம்ப சைலண்டாக போய் வருகிறார்.

Also read: ரோலக்ஸை ஓவர்டேக் செய்ய லியோவில் களமிறங்கும் தனுஷ்.. மிரட்ட வரும் லோகேஷ்

லோகேஷ் செஞ்சாலும் செய்வாரு அப்படிப்பட்ட ஒரு கேரக்டர் தான் அவர். ஏனென்றால் அவரது படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை கொடுக்க வேண்டும். என்பதற்காக எப்படிப்பட்டவர்களையும் பேசி அவர் எதிர்பார்த்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் மிகப்பெரிய கில்லாடி.

அப்படி என்றால் தனுஷின் கதாபாத்திரம் எந்த மாதிரியாக இருக்கும். அதே நேரத்தில் 15 நாள் கால் சீட் கேட்டு இருக்கிறார் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி தான் ஒரு வெயிட்டான கதாபாத்திரமும் இருக்கும். இவரும் சும்மா ஒரு சின்ன ரோல் என்றால் கூட வரமாட்டாரு. அதனால் லியோ படத்தில் யாருமே எதிர்பார்க்க முடியாத அளவிற்கு தனுஷ்க்கு ஒரு கதாபாத்திரம் அமர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Also read: காணாமல் போன தனுஷ் பட நடிகை.. மோசமான கதாபாத்திரத்தால் சிம்பு படத்தோடு முடிந்த கேரியர்