அக்கட தேசத்து நடிகைகள் பலரும் வரிசையாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தது மட்டுமல்லாமல், டாப் ஹீரோயின்களாகவும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அக்கட தேசத்து செம க்யூட் நடிகை ஒருவர் எப்போது தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுப்பார் என இளசுகள் தவியாய் தவித்துக் கொண்டிருந்தனர்.
விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக கலக்கிய படம் தான் உப்பெனா. இந்தப் படத்தில் கடலோர கிராமத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே கிராமத்து பெரும் புள்ளி ஆக இருந்த விஜய் சேதுபதியின் மகளை காதலிக்கிறார். சாதி வெறி பிடித்த அப்பா விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தை மீறி, இந்த காதலர்கள் எப்படி சேர்கின்றனர் என்பது தான் படத்தின் கதை. இதில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்தவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இவர் கோலிவுட்டிற்கு எப்போது வருவார் என பலரும் ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தியின் திரை உலக பயணத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் வெற்றிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. விருமன், பொன்னியின் செல்வன் 1, சர்தார் போன்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
அதன் தொடர்ச்சியாக இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்து ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கார்த்தியின் 25-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் தொடர்ச்சியாக கார்த்தியின் 26-வது படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தினை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பக்கா ஆக்சன் மசாலாவாக உருவாகும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் கடந்த மார்ச் 27ஆம் தேதி எளிமையாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழ், தெலுங்கில் வெளியான தி வாரியர் படத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டிக்கு தமிழிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கஸ்டடி’ என்ற படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கீர்த்தி ஷெட்டி கார்த்தியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கும் அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. ஒரு வழியா கீர்த்தி ஷெட்டி தமிழுக்கு வந்து விட்டார் என்று அவருடைய ரசிகர்கள் தற்போது குத்தாட்டம் போட்டு கொண்டாடுகின்றனர்.