ரெட் ஜெயன்ட் படங்களை தூக்கும் ரகசியம் இதுதான்.. விஜய் படமாவே இருந்தாலும் எங்களுக்கு இதுதான் முக்கியம்

பொதுவாகவே தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் அந்தப் படங்களை வாங்குவதற்கு பல தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள். அதிலும் டாப் நடிகர்களின் படங்கள் என்றால் இவர்கள் மட்டும்தான் வாங்குவார்கள் என்று சில குறிப்பிட்ட நிறுவனங்கள் இருக்கிறது.

அப்படி சமீப காலமாக வெளிவரும் முக்கிய படங்கள் அனைத்தையும் கைப்பற்றி வருகிறது ரெட் ஜெயன்ட் நிறுவனம். மேலும் இவங்க ஒரு படங்களை வாங்குகிறார்கள் என்றால் அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களாக தான் இருக்கும். அதற்கு காரணம் இவர்கள், நடிகர்களின் மார்க்கெட் எப்படி இருக்கிறது அதை அறிந்து அதற்கு ஏற்ற மாதிரி படங்களை வாங்குவார்கள் என்று நினைத்திருந்தோம்.

ஆனால் தற்போது இதற்கு உரிமையாளரான உதயநிதி, அளித்த பேட்டியில் இவர்கள் எப்படி படங்களை கைப்பற்றுகிறார்கள் என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார். அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு படங்களை பார்த்து அதில் எது பெஸ்டாக இருக்கிறதோ அந்த படங்களை அவருடைய டீமுக்கு அனுப்பிவிட்டு அவர்களை அதில் எந்த படத்தில் கதை நன்றாக இருக்கிறதோ அந்த படத்தை சொல்வார்களாம்.

அப்படி என்னுடைய டீம்ல இருக்கிறவங்க அந்த படங்களை நன்றாக பார்த்து எந்த படத்தை வாங்கலாம் என்று எங்களிடம் சொல்வார்கள். அதன் பிறகு அந்தப் படத்தை நாங்கள் உறுதியாக வாங்கி விடுவோம். இதில் எந்தவித மாற்றுக் கருத்துமே செய்ய மாட்டோம். அத்துடன் அதில் பெரிய நடிகர்களின் படங்கள் சின்ன நடிகர்களின் படங்கள் என்று எந்தவித வித்தியாசமும் இல்லாமல் தான் பார்ப்போம்.

எங்களை பொருத்தவரை அது விஜய் படமாக இருக்கட்டும் அல்லது யார் படமாக இருந்தாலும் சரி எங்களுக்கு கதை தான் முக்கியம். இந்த படத்தின் கதை நன்றாக இருக்கிறது. இதை வாங்கி வெளியிட்டால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தும் என்று தெரிந்த பின்னரே அந்த படத்தை நாங்கள் வாங்குவோம்.

அதே மாதிரி முழுக்க முழுக்க இந்த படங்களை வாங்குவதில் இவரை விட இதற்காக வைத்திருக்கும் டீம் தான் முழு வேலையும் பார்த்து வருகிறது. அப்படித்தான் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வருகிற படங்களை அனைத்தையும் வாங்கி வெளியிடுகிறது. இதுதான் இவங்களுடைய வெற்றியின் ரகசியமாக கூட இருக்கிறது.