நிறைய படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆடி இருந்தாலும் அந்த கிளாமர் நடிகையால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார். அதிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் அட்ஜஸ்ட்மெண்ட் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் ஈவன்ட்டுகளில் ஆட வாய்ப்பு வந்தது, அதுவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்த பிறகு தான் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு அந்த நடிகை பணத்திற்காக ஊர் ஊராக சென்று கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்தார். இவர் இப்படி சென்றதால் கணவர் அவர் இஷ்டத்திற்கு ஊர் சுற்ற ஆரம்பித்தார். எந்த வேலைக்கும் கணவர் போக மாட்டார்.
இந்த கிளாமர் நடிகை தான் ஊர் ஊராக சென்று கவர்ச்சி நடனமாடி அதன் மூலம் தன்னுடைய புருஷனுக்கும் சோறு போட்டார். ஒருநாள் வெளியூருக்கு போய்விட்டு திரும்ப வீட்டிற்கு வரும் பொழுது, பக்கத்து வீட்டில் உள்ள மார்வாடி பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். அதை பார்த்து அந்த நடிகை மிகவும் கவலையுடன் அழுது புலம்பினார்.
திடீரென நள்ளிரவில் போலீஸ் நடிகையின் விட்டு கதவைத் தட்டியது. இவர் பயந்து என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்தார். போலீஸ் வீட்டுக்குள் நுழைந்து, ரத்தம் படிந்த ஒரு சட்டையை எடுத்து வந்தது அது அவர் கணவரின் சட்டை. பின்னர் கணவரும், அப்பாவி பெண்ணை உடல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில்
போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரித்துப் பார்த்ததில் கணவர் பக்கத்து வீட்டு மார்வாடி பெண் இயல்பாக பழகி இருக்கிறார்.
இதை தவறாக புரிந்து கொண்டு அவரை அடைய நினைத்திருக்கிறார். அந்த பெண்ணை உடல் ரீதியாக துன்புறுத்த முயன்றார், அது கொலையில் முடிந்தது. பின்னர் கைது செய்யப்பட்டார். இதை கேள்விப்பட்டு அந்த இடத்திலேயே இல்லாமல் காலி செய்து அந்த நடிகை வேறு இடத்திற்கு குடியேறி சென்றுவிட்டார்.
இந்த செய்தி அந்த சமயத்தில் பரபரப்பாக பேசவில்லை. காரணம் அடுத்த நாள் ராஜீவ் காந்தி இறந்த செய்தி வந்ததால் இந்த செய்தி மறைக்கப்பட்டது. ஒரு நாள் நடிகையின் கணவர் பைக் ஆக்சிடென்ட் கோமா ஸ்டேஜ்க்கு தள்ளப்பட்டு படுத்த படுக்கையிலேயே 10 வருடம் இருந்து இறந்து விட்டார்.