ஜோடியாக நடிக்க கூப்பிட்டும் வர மறுத்த பெப்சி உமா.. இந்த நாலு உச்ச நடிகர்களிடம் சிக்காத ரகசியம்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமாகி வந்த தொகுப்பாளனி என்றால் அது பெப்சி உமா. இவரை தெரியாத 90ஸ் கிட்ஸ் யாருமே இருக்க முடியாது. இவருடைய வாய்ஸ்க்கு அத்தனை பேரும் அடிமையாகி இருந்திருக்கிறார்கள்.

அப்பொழுது இருந்த முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்ட தொகுப்பாளனி இவராகத்தான் இருக்க முடியும். எந்த வித அலட்டலும் இல்லாமல், ஓவராகவும் பேசாமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவருடைய மிகப்பெரிய பிளஸ் இவரிடம் இருக்கும் குடும்பப் பாங்கான முகம் தான்.

அப்படிப்பட்ட இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நான்கு முன்னணி நட்சத்திரங்கள் ஆசைப்பட்டு இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்பு இவரை தேடி வந்த பொழுது அதை மறுத்துவிட்டார். அப்படி இவருடன் நடிக்கப்பட்ட அந்த நான்கு நட்சத்திரங்கள் யார் என்றால் ரஜினி, கமல், ஷாருக்கான் மற்றும் சச்சின் டெண்டுல்கர்.

இதில் ரஜினி நடித்து வெளிவந்த முத்து படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அதை மறுத்து விட்டார். பின்பு கமல் மற்றும் ஷாருக்கான் படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் சினிமாவிற்குள் நுழைந்துவிட்டால் சில விஷயங்களை செய்ய வேண்டும். அதனால் எனக்கு படங்களில் நடிப்பதற்கு பெருசாக விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

அடுத்ததாக சச்சின் டெண்டுல்கர் நடித்த ஒரு விளம்பரத்தில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து சச்சின் அவர்களே தொலைபேசி மூலமாக இவரிடம் கேட்டிருக்கிறார். இதில் நடிப்பதற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று இதற்கு ஓகே சொல்லி இருக்கிறார். பின்பு அதில் இவருடைய உடையை அநாகரீகமாக மாற்ற வேண்டும் என்று கூறியதால் இந்த விளம்பரத்தில் நடிப்பதையும் மறுத்துவிட்டார்.

இவர் தொகுத்து வழங்கிய பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 வருடங்களாக நடத்தி வெற்றி பெற்ற ஒரே தொகுப்பாளனி என்றால் அது இவர்தான். இவருக்கு கிடைத்த ரசிகர்களால் மிகவும் பிரபலமானதால் பட வாய்ப்புகள் கிடைத்தும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் கெத்தாக நிராகரித்துவிட்டார்.