ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

புடிச்சாலும் புளியங்கொம்பாக பிடித்த 5 நடிகைகள்.. ரவீந்தரை வளைத்து போட்ட மகாலட்சுமி

சினிமாவில் தன்னுடன் நடித்த சக நடிகர்கள் உடன் சில நடிகைகள் கிசுகிசுக்கப்படுவார்கள். பின்பு அவர்களை திருமணமும் சில நடிகைகள் செய்து கொண்டுள்ளனர். பணத்தாசையால் பிரபலமாக உள்ள சிலரை நடிகைகள் திருமணம் செய்து கொண்டதாக பலரும் பேசியுள்ளனர். ஒரு வகையில் அவர்கள் மனம் ஒத்து திருமணம் செய்து கொண்டாலும் பணக்காரர் என்பதால் தான் திருமணம் செய்து உள்ளார் என்று சொல்லி உள்ளனர். அந்த நடிகைகள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

குட்டி ராதிகா : இவர் சினிமாவில் வருவதற்கு முன்பே 13 வயதில் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதன் பிறகு தான் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் தனது திருமணத்தை மறைத்து விட்டார். மேலும் முதல் கணவர் இறந்த பிறகு முன்னாள் முதல்வர் குமாரசாமியை குட்டி ராதிகா திருமணம் செய்து கொண்டார். இவர் பணத்துக்கு ஆசைப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாக அப்போது பேசப்பட்டது.

Also Read: இயற்கை படத்தில் நடித்த நம்ம குட்டி ராதிகாவா இது.! வைரலாகும் புகைப்படம்.!

அசின் : தமிழ் சினிமாவில் கோலோச்சி இருந்த அசின் பாலிவுட்டில் பட வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்றார். மேலும் அங்கு அசின் நடித்த படங்கள் எல்லாம் பிளாப் ஆனது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுவுடன் அசின் கிசுகிசுக்கபட்டார். அதன் பிறகு மிகப்பெரிய தொழிலதிபர் மைக்ரோ மேக்ஸ் நிறுவனங்களில் ஒருவருமான ராகுல் ஷர்மாவை அசின் திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீதேவி : ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் அதிக முறை ஜோடி போட்ட நடிகை ஸ்ரீதேவி. மேலும் பாலிவுட் சென்று அங்கேயும் தனது தனித்துவமான நடிப்பால் இந்த ரசிகர்களின் மனதில் ஸ்ரீதேவி இடம் பிடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்டார்.

Also Read: ஒரு காலத்தில் சினிமாவை ஆட்டிப் படைத்த அசினா இது.? இப்ப விட்ட கூட ஒரு ரவுண்டு வருவாங்க போல!

மகாலட்சுமி : விஜேவாகா தனது திரைப்பயணத்தை தொடங்கிய மகாலட்சுமி அதன் பிறகு சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையை கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்திருந்தார். அழகு பதுமையாக இருக்கும் மகாலட்சுமி பணத்தாசையால் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக அவர் காது படவே நிறைய பேர் பேசி இருந்தனர். மேலும் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.

ஹன்சிகா : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் ஹன்சிகா தவித்து வந்தார். இவர் சோஹைல் கத்தூரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டும்இன்றி இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது. சோஹைல் கத்தூரியா ஹன்சிகா தோழியின் முன்னாள் கணவர் ஆவார்.

Also Read: காதலுக்கு மொகரகட்ட முக்கியம் இல்ல என நிரூபித்த 5 ஜோடிகள்.. யாருமே எதிர்பார்க்காத மகாலட்சுமி ரவீந்தர் ஜோடி

- Advertisement -

Trending News