பழம்பெரும் நடிகையின் ஒரே மகளான வாரிசு நடிகை, தன்னுடைய முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்து வசூலை அள்ளி வெள்ளிவிழா கண்டார். அதன் தொடர்ச்சியாக டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் வாரிசு நடிகையின் அம்மா இறந்துவிட, தனிமையில் இருந்த அவர், ஒருவரை காதலித்து அவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.
திடீரென்று அந்த நபர் வாரிசு நடிகையை இஷ்டத்திற்கு அனுபவித்து அம்போன்னு விட்டு சென்றார். அப்பாவின் ஆறுதல் இல்லாமல் அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்து வந்த அந்த வாரிசு நடிகைக்கு, காதலன் திடீரென கழட்டி விட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவரை தேடி வருவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். யார் அவர்? அவருடைய புகைப்படம் இருக்கிறதா? என பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் அந்த வாரிசு நடிகை பதில் அளிக்கவில்லை.
அதன் பிறகு தான் அந்த வாரிசு நடிகைக்கு மனநிலை பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது. ஏனென்றால் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட போது கூட தீயணைப்பு வீரர்களை அந்த வாரிசு நடிகை உள்ளே அனுமதிக்கவில்லை.
யாரைப் பார்த்தாலும் அவர் சந்தேக கண்ணோட்டத்துடன் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் அவருடைய வீடு தீப்பற்றிய போதுக்கூட தீயணைப்பு வீரர்களை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் தீயை அணைக்க முன்வந்த போது அவர்களிடம் சண்டை போட்டுள்ளார். இப்போது வரை அந்த நடிகைக்கு என்ன ஆச்சு! எதனால் இப்படி மனநோயாளியாகவே மாறிவிட்டார் என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.