முதல் முதலாக மணிரத்னம்- கமல் படத்தில் இணையும் டாப் ஹீரோயின்?. நிறைவேறிய கனவு!

உலகநாயகன் கமலஹாசன் அடுத்து, இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் அந்த படத்தில் இதுவரை மணிரத்னத்துடனும் உலக நாயகனுடனும் இணையாத டாப் நடிகை தான் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்.

ஏனென்றால் அண்மையில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, கடந்த 10 ஆண்டுகளாக நம்பர் ஒன் நடிகையாக கலக்கியதற்காக சிறந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை இயக்குனர் மணிரத்னம் தான் நயன்தாராவிற்கு வழங்கினார்.

அப்போது நயன்தாரா, நாடே கொண்டாடும் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக விருப்பம் தெரிவித்தார். எல்லா நடிகைகளை போன்று எனக்கும் மணிரத்தினம் சார் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. 

அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது, சில காரணங்களால் அது நடக்கவில்லை. இனியாவது நடக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று பகிரங்கமாக அவரிடம் வாய்ப்பு கேட்டு இருக்கிறார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், விஜய், சரத்குமார் என டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்த நயன்தாரா இதுவரை உலக நாயகன் கமலஹாசன் உடன் மட்டும் சேர்ந்து நடிக்கவில்லை.

ஒருவேளை மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் ஆண்டவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் நயன்தாரா முதல் முதலாக பாலிவுட்டில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து என்ட்ரி கொடுக்கிறார்.

அதே சமயம் தமிழ் படத்திலும் நடிக்க ஆர்வம் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டாருக்கு கமலஹாசன்- மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அவர் கண்ட பல நாள் கனவு நிறைவேறிவிடும்.