ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

நாயகன் 2வில் நடிக்க ஆசை.. மேடையில் மணிரத்தினத்திடம் பகிரங்கமாக வாய்ப்பு கேட்ட நடிகர்

மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகி 500 கோடி வரை வசூலை அசால்டாக தட்டி தூக்கியது. அதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகுவதால் படக்குழுவினர் முக்கிய நகரங்களுக்கு சென்று ப்ரோமோஷன் வேலைகளை படு ஜோராக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஒருவர் மணிரத்தினத்திடம் மேடையிலேயே பகிரங்கமாக வாய்ப்பு கேட்டிருக்கிறார். அதிலும் மணிரத்தினம் இயக்கிய உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த நாயகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று, நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் தன்னுடைய நீண்ட கால ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

Also Read: எண்டு கார்டே இல்லாத பொன்னியின் செல்வன்.. மணிரத்தினம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் லைக்கா

ஏற்கனவே நயன்தாரா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் மணிரத்தினத்தின் படத்தில்  நடிப்பது தான் தன்னுடைய நீண்ட நாள் கனவு என வெளிப்படுத்திய நிலையில், தற்போது ஜெயம் ரவியும் மணிரத்தினத்திடம் வாய்ப்பு கேட்டு இருக்கிறார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது மணிரத்தினத்திற்கு நாயகன் 2 படத்தை எடுக்கும் ஐடியா இருந்தால், அதில் ஜெயம் ரவி- நயன்தாரா ஜோடியை இணைத்து விட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் தனி ஒருவன் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தனர் இந்த ஜோடி மறுபடியும் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்களும் விரும்புகின்றனர்.

Also Read: அஜித்தால் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. லைக்கா எடுத்த திடீர் முடிவு

இதை புரிந்து கொண்டு மணிரத்தினமும் விரைவில் நாயகன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல கமலஹாசனின் அடுத்த படத்தை மணிரத்தினம் இயக்குவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியான நிலையில், அது நாயகன் 2  இருக்க வாய்ப்பில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆகையால் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவியின் நடிப்பு திறமை ஏற்கனவே மணிரத்தினத்திற்கு தெரியும் என்பதால் அவரை வைத்து நாயகன் 2 படத்தை எடுப்பாரா இல்லையா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.

Also Read: ஓடிடி-யின் மூலம் கவர்ச்சியில் தாராளம் காட்டும் 5 நடிகைகள்.. இளசுகளை ஜொள்ளு விட வைத்த ராதிகா ஆப்தே

Trending News