எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய உழைப்பினால் வளர்ந்து முன்னணி நடிகை என்கின்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகை சமந்தா. இவரின் அற்புதமான நடிப்பு திறமையால் புகழ்பெற்றாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பின்னடைவை சந்தித்தார்.
அது மட்டுமல்ல மயோசிடிஸ் நோய் பாதிப்பும் அவரின் கேரியரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்தது. இருப்பினும் மனம் தளராத சமந்தா, மருத்துவர்களின் ஆலோசனையின் படி முறையான உடற்பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு மறுபடியும் சினிமாவில் பிஸியாகிவிட்டார்.
சிகிச்சைக்குப் பின் கிளாமர் லுக்கில் தூள் கிளப்பும் சமந்தா

சமந்தா நடிப்பில் தற்போது சாகுந்தலம் என்கின்ற சரித்திர படம் ரிலீஸ் ஆகி உள்ளது. சிகிச்சைக்குப் பிறகு கிளாமர் லுக்கில் தூள் கிளப்பும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு இளசுகளை திணறடித்துள்ளார்.
லண்டனிலிருந்து வெளியிட்ட கிளாமர் புகைப்படம்

ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடம் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் சிட்டாடல் இதன் ப்ரீமியம் லண்டனில் திரையிடப்பட்டது. இதற்கு நடிகை சமந்தாவும் சென்றிருந்தார். அப்போது கிளாமர் தூக்கலான உடையில் காட்சி அளித்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.
ஹாலிவுட் நடிகைகளை எல்லாம் மிஞ்சிய சமந்தா

இதில் சமந்தா ஹாலிவுட் நடிகைகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு கிளாமர் லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். லண்டனிலிருந்து வெளியான இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.