தியேட்டரில் சோடைப்போன விஜய் சேதுபதி படம்.. சர்வதேச அளவில் படைக்கும் சாதனை

நடிகர் விஜய் சேதுபதி சமீபகாலமாக கிடைக்கும் படங்கள் எல்லாவற்றையுமே கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். அதில் சில படங்கள் மாபெரும் வரவேற்பு பெற்றாலும் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்த படங்கள் தொடர்ந்து சோடை போய் வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் படம் ஒன்று மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் தயாரிப்பு நிறுவனம் திணறியது. அதாவது விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் என்றால் அது சீனு ராமசாமி தான். இவர்களது கூட்டணியில் நிறைய படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடைசியாக இவர்களது கூட்டணியில் வெளியான திரைப்படம் மாமனிதன்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில் மாமனிதன் படம் வெற்றி பெறவில்லை.

அதுமட்டுமின்றி இந்த படத்தை பற்றி பெரிதாக யாரும் பேசவும் இல்லை. மேலும் இப்படம் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. தியேட்டரில் வெளியாகும் போது வெறும் ஐந்து கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இவ்வாறு மாமனிதன் படம் தியேட்டரில் சோடைபோன நிலையில் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்த வருகிறது.

அதாவது இந்த படத்திற்கு உலக அரங்குகளில் பல விருதுகளை பெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விழாவிலும் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் என்ற விருதினை மாமனிதன் படம் பெற்றுள்ளது. மேலும் பல விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழர்கள் இந்த படத்தை கொண்டாட தவறி விட்டனர். மேலும் மாமனிதன் ஓடிடி தளத்தில் வெளியான போது கிட்டதட்ட 51 கோடி வசூல் செய்து இருந்தது. மாமனிதன் போன்ற அற்புதமான படைப்புகள் தமிழ் சினிமாவில் வெளியானாலும் ரசிகர்கள் இதைக்கண்டு கொள்ளாதது வேதனைக்குரிய விஷயம்.