வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ராதிகாவின் கிழக்கு வாசல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.. விஜய்யின் அப்பாவுடன் செட் ஆகல

ராதிகா சரத்குமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடான் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் கிழக்கு வாசல் என்ற புத்தம் புது சீரியல் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகரும் நடித்து முதல் முதலாக சின்ன திரைக்கு என்ட்ரி கொடுக்கிறார்.

இவருடன் ராதிகா, பூவே பூச்சுடவா சீரியலின் கதாநாயகி ரேஷ்மா, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலின் கதாநாயகி அஸ்வினி, சஞ்சீவ் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த சீரியலில் இணைந்து நடிக்கின்றனர். இவ்வாறு கிழக்கு வாசல் சீரியலில் ஒட்டுமொத்த சின்னத்திரை பிரபலங்களும் இணைந்து இருப்பதால் இந்த சீரியலின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

Also Read: என்ன விட ராங்கியா இருப்பா போல.. விக்னேஷ் சிவனிடமே நயன்தாராவை பற்றி ஒத்து ஊதிய நடிகை

அது மட்டுமல்ல சமீபத்தில் கிழக்கு வாசல் சீரியலின் முதல் நாள் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இந்நிலையில் திடீரென்று இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சஞ்சீவ் ஏற்கனவே சன் டிவியில் மட்டும் 25-க்கும் அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையிலும் விஜய்யின் நண்பராக துணை வேடத்தில் நடித்து கவனம் பெற்றார். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர்.

Also Read: பிரபல நடிகையை உருகி உருகி காதலித்த கேப்டன்.. அதே மாதிரியே பெண்ணை திருமணம் செய்து வைத்த ராவுத்தர்

இந்நிலையில் சஞ்சீவ் விஜய்யின் தந்தையுடன் முதல் முதலாக கிழக்கு வாசல் சீரியலில் இணைந்திருப்பது தளபதி ரசிகர்களையே குஷிப்படுத்தியது. ஆனால் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், அவர்களுக்கு இடையே சரியான பேச்சு வார்த்தை கூட இல்லாமல் இருக்கிறது.

அப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் மற்றும் எஸ்ஏசி இருவருக்கும் படபிடிப்பு தளத்தில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் எஸ்ஏசி உடன் இணைந்து ஒரே சீரியலில் நடிப்பது செட்டாகாது என சஞ்சீவ் ராதிகாவின் கிழக்கு வாசல் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

Also Read: பக்காவான கெமிஸ்ட்ரி, விஜயகாந்தை ரொமான்ஸ் செய்து கிறங்கடித்த 5 நடிகைகள்.. ‘ரா’-னு வந்தாலே கிறங்கி விழும் கேப்டன்

- Advertisement -

Trending News