பிரபலமாக இருந்தாலே சர்ச்சைகளும் வந்து கொண்டு தான் இருக்கும் என்பதற்கேற்ப சமீப காலமாக விஜய் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை கேலிக்கூத்தாகி வருகிறது. தன் மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்றும், கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கம் காட்டுகிறார் என்றும் ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் பல சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது பொது விழாக்களுக்கு எப்போதுமே மனைவியுடன் அவரும் விஜய் அட்லி வீட்டு வளைகாப்பு, வாரிசு இசை வெளியிட்டு விழா என அனைத்திற்கும் தனியாகத் தான் வந்திருந்தார். இதுவே பலரின் வாய்க்கும் அவலாகிப் போனது.
Also read: ஜவானால் தளபதி விஜய்க்கு ஏற்பட்ட சிக்கல்.. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட படம்
அதைப் பற்றி மீடியாக்களில் பலரும் பலவிதமான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட ஆரம்பித்தனர். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் விஜய்யின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று கூட செய்திகளை பரப்பினார்கள். உண்மையில் இது எதுவுமே அதிகாரப்பூர்வமான விஷயங்கள் கிடையாது.
விஜய்க்கும் அவருடைய மனைவிக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இப்போது வரை அவர்கள் பிரிய வேண்டும் என்ற முடிவுக்கு வரவில்லை. ஆனால் மீடியாக்கள் அவர்களுக்கு விவாகரத்தை வாங்கி கொடுக்கும் அளவுக்கு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லார் குடும்பத்திலும் இருப்பது போல விஜய் வீட்டிலும் சிறு பிரச்சனை இருப்பது உண்மைதான்.
அதை சரி செய்யும் முயற்சியில் தான் தளபதி இருக்கிறாராம். அதனாலேயே அவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அது பழைய போட்டோவாக இருந்தாலும் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் அதன் மூலம் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
இதை தற்போது அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்கள் கூட உறுதிப்படுத்தி இருக்கிறது. அதாவது இப்போதும் விஜய், சங்கீதா இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்களாம். அதனால் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் பல மாதங்களாக காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருந்த ஒரு சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.
Also read: விஜய்யின் அரசியலுக்கு ஆலோசனை கூறிய நடிகர்.. உசிப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் வில்லன்