தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்களிடையே பிரபலமாக பேசப்படும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மளிகை கடை வைத்து நடத்தி வரும் அண்ணன் தம்பி நால்வரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இத்தொடர் அமைந்திருக்கும். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் மூத்த மருமகளாகவும், அண்ணியாகவும் வரும் தனத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை அதில் வெளிப்படுத்தி இருப்பார் சுஜிதா. இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிகையாகவும் மற்றும் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய இவருக்கு முதல் படமே பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதிலும் பாக்யராஜின் குழந்தையாக இவர் அறிமுகமானது பல பேருக்கு தெரியாது. அந்த வகையில் 80ஸ்களில் வெற்றி நடை போட்டு மக்களின் பேராதரவை பெற்ற படம் தான் முந்தானை முடிச்சு.
இப்படத்தை நினைவு கொள்ளாதவர்களே இருக்க முடியாது. பாக்யராஜ் இயக்கி நடித்த இப்படத்தில் அவருக்கு மகனாக ஆறு மாத குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சுஜிதா. ஒன்றும் தெரியாத பருவத்திலேயே ஊர்வசி போன்ற பிரபலங்களோடு இவர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆரம்பித்தது தான் அவருடைய திரை பயணம்.
அதன் பிறகு பல நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். கொஞ்சம் வளர்ந்த பிறகு அஜித், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களிலும் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து முன்னேறினார். இப்படி சினிமாவில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தன் திறமையை இவர் நிரூபிக்க ஆரம்பித்தார்.
அப்படித்தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் கலக்கி கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள திரையுலகிலும் இவர் ரொம்பவும் பிரபலமாக இருக்கிறார். ஆறு மாதத்திலேயே நடிக்க ஆரம்பித்த அவர் இத்தனை வருடங்களாக சுறுசுறுப்புடன் நடித்து வருவது ஆச்சரியமாக தான் இருக்கிறது.
ஆறு மாத குழந்தை சுஜிதா
