சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பிகினி லெவலுக்கு இறங்கியும் கிடைக்காத வாய்ப்பு.. விவாகரத்து நடிகருக்கு ரூட் போடும் பால் நடிகை

வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த பால் நடிகை இப்போது தன்னுடைய பழைய நட்பை புதுப்பிக்க பிளான் போட்டிருக்கிறாராம். மார்க்கெட் இருக்கும் போதே காதல், கல்யாணம், விவாகரத்து என பரபரப்பை கிளப்பினார். அதன் பிறகு தொடர்ந்து நடித்து வந்தாலும் பெரிய அளவில் அவர் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த நடிகை சோஷியல் மீடியாவே கதி கலங்கி போகும் அளவுக்கு போட்டோக்களை வெளியிட ஆரம்பித்தார். அதன் விளைவாக கிடைத்த படங்களும் வந்த சுவடு தெரியாமல் போனது. இதற்கு இடையில் ஆண் நண்பர்களுடன் நட்பு, பிகினி உடையில் ஆட்டம் என தன் போக்கில் அவர் வாழ்ந்து வந்தார்.

Also read: 2 வருட லிவிங் ரிலேஷன்ஷிப்பை முடித்துக் கொண்ட நடிகை.. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அராஜகம் செய்த நடிகர்

ஆனால் அதுவும் பிரச்சினையை கிளப்பிய நிலையில் சிறிது காலம் கோவில் கோவிலாக சென்று சாமியார் வேஷமும் போட்டுப் பார்த்தார். ஆனால் எதுவும் ஒர்க்கவுட் ஆகாத நிலையில் தான் தற்போது தன் பழைய நட்பை புதுப்பிக்க விவாகரத்து நடிகரை நாடி இருக்கிறாராம்.

ஏற்கனவே இந்த இரண்டு பேரின் திருமண முறிவும் அவர்களுக்குள் இருந்த ரகசிய நெருக்கத்தால் தான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகை தாமாகவே நடிகருக்கு போன் செய்து வாய்ப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் நம்முடைய ஜோடி பொருத்தம் மீண்டும் பேசப்படும் என்ற ஆசை வார்த்தையும் கூறி இருக்கிறார்.

ஏற்கனவே சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்சனையால் சோர்ந்து போயிருக்கும் நடிகர் இது என்னடா புது குழப்பம் என்று அரண்டு போய் இருக்கிறாராம். இருந்தாலும் விரைவில் நல்ல முடிவா சொல்றேன் என நடிகையிடம் அவர் கூறியிருக்கிறார். அந்த வகையில் நடிகர் இயக்கப் போகும் அடுத்த படத்தில் எப்படியும் நடிகைக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read: அனுதாபத்தை வைத்து செய்த பிரமோஷன்.. ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதால் அப்செட்டில் இருக்கும் நடிகை

Trending News