செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.. அரசியலுக்கு அஸ்திவாரம் போடும் தளபதி

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். காஷ்மீரில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது படக்குழு சென்னையில் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 60% படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்த படம் வரும் அக்டோபர் மாத ரிலீசுக்கு தயாராகி கொண்டு இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இணைவதால் தளபதியின் லியோ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அது அவருடைய ரசிகர்கள் கூட்டத்தை காண்பதற்கும் மற்றும் விஜய் ஏதாவது ஒரு புதிய தகவலை சொல்லுவார் என்பதற்காக மட்டுமே இந்த விழாக்களை தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இந்த முறை லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:அவசர அவசரமாய் விஜய் சந்தித்த 3 தயாரிப்பாளர்கள்.. கடைசி தடவை வார்னிங் கொடுத்த தளபதி

எப்போதுமே விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் சென்னையில் மட்டுமே நடைபெறும். ஆனால் இந்த முறை லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை திருச்சியில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இது விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க விஜய் எடுத்த முடிவு. தமிழகத்தில் உள்ள தன்னுடைய மொத்த ரசிகர்களையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டிருக்கும் பிளான் இது.

தளபதி விஜய் இந்த விழாவை தன்னுடைய அரசியல் முன்னோட்ட மாநாடாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அரசியல் மாநாடு என்று சொன்னால் அனுமதி மறுக்கப்பட்டு விடும் என்ற எண்ணத்தில் இதை இசை வெளியீட்டு விழாவாக நடத்துவது போல் திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த அரசியல் மாநாட்டில் நடிகரும், இயக்குனரும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கலந்து கொள்கிறார்.

Also Read:3வது முறை மோதியும் அஜித்துடன் தோற்றுப்போன விஜய்.. வம்சியால் தளபதிக்கு வந்த சோதனை

சமீபத்திய பேட்டி ஒன்றில் சீமான், தளபதி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக சந்திக்க இருக்கிறார்கள் என்றும் அதற்கான முன்னோட்டம் தான் இந்த இசை வெளியீட்டு விழா என்றும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது வரும் ஜூன் 22 ஆம் தேதி அதாவது தளபதியின் பிறந்த நாளன்று நடைபெறும் என்று தற்போதைய தகவல்கள் சொல்கின்றன.

எதிர்காலத்தில் இந்த தேதி ஒரு வேளை மாற்றப்படும். ஆனால் மாநாடு நடத்துவது என்பது ரொம்பவும் உறுதியான தகவல்களாகவே இருக்கிறது. லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் மூலம் விஜய் தன்னுடைய அரசியல் கணக்கை தொடங்க இருக்கிறார். இதற்கு முழுக்க முழுக்க அவருடைய மக்கள் இயக்கம் கட்சியின் நிர்வாகிகள் தங்களுடைய பெரிய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read:விஜய்யின் அருவருப்பான அரசியல்.. மட்டமான வேலைகளை புட்டு புட்டு வைக்கும் பிரபலம்

Trending News