எவ்வளவோ காட்டிட்டேன், லிப் லாக் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. தில்லா சொன்ன நடிகை

யார் என்ன சொன்னாலும் எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத நடிகை ஒருவர் சர்ச்சைக்குரிய படங்களில் முதன்முதலாக அறிமுகமாகி, அதன் பிறகு கிராமத்து கதாநாயகியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.

அதன் பின் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகையின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அந்த நடிகையை பார்த்தாலே அவர் எந்த அளவிற்கு சுதந்திரமாக இருக்கிறார் என்பது  தெரிந்தது. ஆண் நண்பர்களுடன் பாட்டிலும் கையும்மாய் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தை உலுக்கியது.

அப்படிப்பட்ட நடிகை லிப் லாக் காட்சிகளில் நடிப்பதெல்லாம் ஒரு விஷயமா என்று சர்ச்சைக்குரிய கேள்விக்கு தில்லாக பதில் சொல்லி இருக்கிறார். நடிகை அமலா பால் மலையாள நடிகை பிரித்விராஜ் உடன் ஆடு ஜீவிதம் என்ற படத்தில் இணைந்து  நடித்துள்ளார்.

இதில் பிரித்விராஜின் மனைவியாக அமலா பால் நடித்த போது, அவர்களுக்கிடையே ஹாட்டான முத்தக்காட்சி ஒன்று இடம்பெற்றது. அந்த காட்சி இடம்பெற்ற ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட விமர்சனங்கள் அமலா பாலுக்கு எதிராக குவிந்தது. அதற்கெல்லாம் தற்போது வெளிப்படையாக பதில் சொல்லி  இருக்கிறார்.

இந்த படத்தின் கதையை சொல்லும்போதே படத்திற்கு அந்த முத்த காட்சி தான் மிகவும் முக்கியமானது என இயக்குனர் தெளிவாக  சொல்லிவிட்டார். கதைக்கு தேவை என்பதற்காக ஆடை படத்தில் ஆடை இன்றியே நடித்தேன். அப்படி இருக்கும்போது படத்திற்கு மிக முக்கியமான லிப்லாக் காட்சி எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று அதிரடியாக பதில் சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

மேலும் ஆடு ஜீவிதம் திரைப்படம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதை தேசிய விருதை வெல்லும் அளவுக்கு தரமான கதை என்று படக்குழு நம்பிக்கையுடன் ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.