80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலத்தின் வசூல் லாபமா, நஷ்டமா!. கணக்கு பார்த்தால் தலையே சுத்துது

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் வெளியானது. 80 கோடி பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் படத்தின் வசூல் தாறுமாறாக இருக்கும் என படக்குழுவினர் நம்பினார்கள்.

ஆனால் சாகுந்தலம் படம் மிக மோசமான தோல்வியை தழுவியதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளால், சமந்தா தற்போது நொந்து போய் இருக்கிறார். மேலும் இந்த படத்தின் தியேட்டர் ரைட்சே மிகக் குறைந்த விலைக்கு விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமல்ல மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவான சாகுந்தலம் திரைப்படத்திற்கு முதல் நாளிலேயே எதிர்பார்த்த ஓப்பனிங் கிடைக்கவில்லை.

ஏனென்றால் மேக்கிங்கில் பேண்டஸியாக இருந்தாலும் கதை, திரைக்கதை பார்ப்பதற்கு ரொம்பவே போர் அடித்ததாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து நெகடிவ் கமெண்ட்களை குவித்து கொண்டிருக்கின்றனர். இதனால் 80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம் முதல் வாரத்தில் வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இந்த படத்தின் தியேட்டர் உரிமை 35 கோடிக்கு மட்டும்தான் விற்கப்பட்டது.

அத்துடன் பல ஏரியாக்களில் சாகுந்தலம் படத்தை வாங்கவே ஆள் இல்லை. மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம் திரைப்படம் குறைந்தது 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளும் என தயாரிப்பாளர் பெரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் அவர் தலையில் துண்டை போட்டு விட்டார் சமந்தா.

இதனால் திரையரங்கில் மட்டும் சாகுந்தலம் படம் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் மட்டுமல்ல திரையரங்கு விநியோகஸ்தர்களும் சாகுந்தலம் திரைப்படத்தால் கடுப்பாகி இருக்கின்றனர். ஏனென்றால் படம் எதிர்பார்த்ததில் பாதி வசூல் கூட ஆகவில்லை.

இவர்களுக்கு மட்டுமல்ல சமந்தாவும் தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவருடைய செல்போனை கூட சுவிட்ச் ஆப் செய்துவிட்டு யாரிடமும் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார். எப்படி பார்த்தாலும் சாகுந்தலம் சமந்தாவின் படு தோல்வி படங்களின் லிஸ்டில் சென்று விட்டது.