முரளியால் சினிமாவை வெறுத்த இயக்குனர்.. 25 வருட நட்பிற்கு செய்த துரோகம்

திறமைக்கு நிறம் முக்கியம் இல்லை என்று நிரூபித்து காட்டிய முரளி ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ரஜினி, கமல் ஆகியோர் முன்னணியில் இருந்த காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்திருந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அது இன்று வரை தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரும் இழப்பாகவே இருக்கிறது. இந்நிலையில் இவர் செய்த துரோகத்தால் சினிமாவையே நான் தூக்கி எறிந்து விட்டேன் என்று நடிகை தேவயானியின் கணவர் மனவருத்தத்துடன் பேசி இருக்கிறார். அதாவது அவர் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்திலேயே முரளி அவருக்கு ரொம்பவும் நெருக்கமான நண்பராக இருந்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ராஜகுமாரனுக்கு ரொம்பவும் நம்பிக்கையான ஒருவராக இருந்த முரளி 25 வருடம் வரை அவருடன் நல்ல நட்பில் இருந்திருக்கிறார். ஆனாலும் அவர் ஒரு படம் இயக்கும் போது முரளி பல சங்கடங்கள் கொடுத்தாராம். சரியான நேரத்திற்கு சூட்டிங் வராமல் சம்பள விஷயத்திலும் பிரச்சனை செய்திருக்கிறார்.

இதனால் தயாரிப்பாளர் அந்த படத்தையே நிறுத்தும் அளவுக்கு சென்றிருக்கிறார். அப்பொழுது தான் ஒன்றிரண்டு திரைப்படங்கள் இயக்கி முன்னேறி வந்த ராஜகுமாரனுக்கு இது பெரும் மன கஷ்டத்தை கொடுத்திருக்கிறது. அதனால் வெறுத்துப்போன அவர் சினிமா துறையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

மேலும் முரளி செய்த துரோகத்தால் தான் நான் சினிமா துறையை விட்டு ஒதுங்கி இருக்கிறேன் என்றும் அவர் வருத்தத்துடன் ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இத்தனை வருட திரை வாழ்க்கையில நான் ஒரு பத்து லட்சம் கூட சம்பாதித்தது கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் படம் இயக்கா விட்டாலும் கடுகு திரைப்படத்தில் தன் அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதைப் பார்த்த பலரும் தேவயானியின் கணவரா இது என ஆச்சரியப்பட்டு போனார்கள். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் ஏன் வரவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.